இந்திய முதலமைச்சர்களின் பட்டியல்
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
இந்திய முதலமைச்சர் இந்திய மாநிலமொன்றின் அரசினை தலைமையேற்று நடத்தும் சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இவர் மாநிலத்தினை வழிநடத்திட பெரும்பாலான செயலாக்க அதிகாரங்களை உடையவர். சட்டப் பேரவையின் ஐந்தாண்டு காலமும் இவர் பணிபுரியவும் மீண்டும் தேர்ந்தெடுக்கபடவும் கூடும். ஆளுநர்கள் மாநிலத்தின் தலைவர்களாக கருதப்படினும் அவர்களது பணி அலங்காரமானதே.
28 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பது முதலமைச்சர்கள் உள்ளனர். அவர்களது பட்டியல் வருமாறு:
[தொகு] மாநிலங்களின் முதலமைச்சர்கள்
- † ஆட்சிப்பகுதிகள்
[தொகு] கட்சிவாரியாக
2009 தேர்தல்களுக்குப் பிறகு வெவ்வேறு மாநிலங்களில் கட்சிவாரியாக ஆட்சி செய்யும் நடப்பு பட்டியல்.
| கட்சி | மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் வென்ற எண்ணிக்கை | மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் | நடப்பு கூட்டணி (2009) |
|---|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு | 12 | ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், தில்லி†, கோவா, அரியானா, மகாராட்டிரம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி†, இராசத்தான், கேரளா | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
| பாரதிய ஜனதா கட்சி | 7 | சத்தீசுக்கர், குசராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்டம், சார்க்கண்ட் | தேசிய ஜனநாயக கூட்டணி |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 3 | திரிபுரா | மூன்றாம் அணி |
| அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 1 | தமிழ்நாடு | |
| ஐக்கிய ஜனதா தளம் | 1 | பீகார் | தேசிய ஜனநாயக கூட்டணி |
| நாகாலாந்து மக்கள் முன்னணி | 1 | நாகாலாந்து | தேசிய ஜனநாயக கூட்டணி |
| சிரோன்மணி அகாலிதளம் | 1 | பஞ்சாப் | தேசிய ஜனநாயக கூட்டணி |
| பகுஜன் சமாஜ் கட்சி | 1 | உத்தரப் பிரதேசம் | மூன்றாம் அணி |
| பிஜு ஜனதா தளம் | 1 | ஒரிசா | மூன்றாம் அணி |
| ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 1 | சம்மு காசுமீர் | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
| சிக்கிம் சனநாயகக் கூட்டணி | 1 | சிக்கிம் | கூட்டணி இல்லை |
| திரிணாமுல் காங்கிரசு | 1 | மேற்கு வங்காளம் | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
தற்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 12 மாநிலங்களிலும் (+2 ஆட்சிப்பகுதிகள்), தேசிய ஜனநாயக கூட்டணி 10 மாநிலங்களிலும், மூன்றாம் அணி 5 மாநிலங்களிலும் ஆட்சி புரிகின்றன.