இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்
IRCTC Logo.svg.png
வகை இந்திய இரயில்வேயின் துணை நிறுவனம்
தொடக்கம்
தலைமையகம் புதுதில்லி, இந்தியா
சேவை இடம் இந்தியா
தொழில்துறை தொடர்வண்டிப் போக்குவரத்து
சேவைகள் உணவு வழங்கல், சுற்றுலா மற்றும் இணையவழி பயணச்சீட்டு
தாய்நிறுவனம் இந்திய இரயில்வே
வலைத்தளம் IRCTC website

சுருக்கமாக ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சூட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.

பொருளடக்கம்

[தொகு] சேவைகள்

[தொகு] உணவு வழங்கல்

இந்த நிறுவனம் இந்தியா முழுமையும் தொடர்வண்டிகளிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கான உணவு வழங்கும் பொறுப்பு ஏற்றுள்ளது. தொடர்வண்டி செலும் தொலைவு மற்றும் சராசரி பயணிகள் எண்ணிக்கை இவற்றைக் கொண்டு இரயில்வே நிறுவனம் தொடர்வண்டிகளில் சமையலகப் பெட்டிகளை இணைக்கிறது. சமையலகப் பெட்டிகள் இணைக்கப்படாத வண்டிகளுக்கு வழியிலுள்ள தொடர்வண்டி நிலையங்களிலிருந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

[தொகு] இணையவழி பயணச்சீட்டு

ஐஆர்சிடிசி இந்திய இரயில்வேயின் செயல்திறனை கூட்டும்விதமாக இந்தச் சேவையில் புகழ்பெற்றுள்ளது. பயணச்சீட்டு பதிவு செய்ய தொடர்வண்டி போல நீண்ட வரிசைகளில் நின்ற காலத்தினை மாற்றி எங்கிருந்தும் இணையவழியே பதிவு செய்யும் சிக்கலற்ற செய்முறையை அறிமுகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களில் புரட்சி செய்துள்ளது. இணையம் மட்டுமன்றி நகர்பேசிகளில் ஜி.பி.ஆர்.எசு மற்றும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் பதிவு செய்ய இயலும். பதிவு செய்வதுடன் பயணச்சீட்டு பதிவை ரத்தாக்கவும் மாற்றவும் இணையவழியே இயலும். இ-பயணச்சீட்டு போன்றே ஐ-பயணச்சீட்டையும் வழங்குகிறது. இ-பயணசீட்டு பயணியே தனது கணினியில் அச்சிட இயலும்; ஐ-பயணச்சீட்டில் இணையவழி பதிவுக்குப் பின்னர் வழமையான பயணச்சீட்டு அஞ்சல் வழியே அனுப்பப் படும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளின் பிஎன்ஆர் எண் வழியே தற்போதைய நிலை அறியும் சேவையும் வழங்கப்படுகிறது.

மும்பை புறநகர் தொடர்வண்டிகளில் பயணம் செய்வோருக்கு மாதாந்திர, காலாண்டு பருவப் பயணச்சீட்டுகளும் இணையம் வழியே பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி பயணம் செய்வோருக்கு "சுபயாத்ரா" என்ற பற்றுறுதி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் இப்பயணிகளுக்கு பயணச்சீட்டுக் கட்டணத்தில் தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன.[1]

அண்மையில் ஐஆர்சிடிசி வான்வழிப் பயணங்களுக்கும் தங்குவிடுதி வசதிகளுக்கும் இணையவழியே முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளது.[2]

[தொகு] சுற்றுலா

உள்ளூர் மறும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சிக்கன மற்றும் சொகுசு தொகுப்புச் சுற்றுலா திட்டங்களை கையாள்கிறது. பரவலாக இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களுக்குச் செல்கின்ற ஓர் தொகுப்பாக பாரத் தர்சன் விளங்குகிறது.[3] சிறப்பு தொடர்வண்டிகளில் சொகுசு சுற்றுலா திட்டங்களாக உள்ள சில:

  • பேலஸ் ஆன் வீல்ஸ் (சக்கரங்களுள்ள அரண்மனை)
  • ரோயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்
  • கோல்டன் சாரியட் (தங்க இரதம்)
  • டெக்கான் ஒடிசி
  • ரோயல் ராசத்தான் ஆன் வீல்ஸ்
  • புத்திஸ்ட் சர்குய்ட் டிரைன் (பௌத்த தொடர்வண்டி சுற்று)

மேலும் மகாராஜா எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் ஐஆர்சிடிசி பங்காளராக உள்ளது.[4]

[தொகு] மேற்கோள்கள்

  1. Shubh Yatra loyalty program
  2. IRCTC
  3. Bharat Darshan
  4. Gupta, Jayanta (2010-03-19). "Rs 1 lakh a night on Maharajas’ Express". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Rs-1-lakh-a-night-on-Maharajas-Express/articleshow/5700045.cms. Retrieved 2010-04-06. 

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்