இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்
இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் (Union Budget of India), அல்லது இந்திய அரசியலமைப்பின் சட்டக்கூறு 112இல் குறிப்பிடப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை[1] ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் நிதி அமைசரால் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்தியக் குடியரசின் வருடாந்திர வரவு செலவுத் திட்டமாகும். இந்திய அரசின் நிதியாண்டு துவங்கும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்னர் இத்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பின்னரே அரசு எந்தவொரு செலவையும் செய்ய இயலும். முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பிறர் எவரையும்விட மிகக் கூடுதலாக எட்டு முறை நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார். [2]
பொருளடக்கம் |
[தொகு] காலவரிசை
[தொகு] தாராளமயமாக்கலுக்கு முன்னர்
இந்தியா விடுதலை பெற்றபின்னர் முதல் நிதிநிலை அறிக்கையை நவம்பர் 26, 1947 ஆம் ஆண்டில் வழங்கியப் பெருமை தமிழரான ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களுக்கு உரியது.[2]
1959-60 முதல் 1963-64 வரையில், 1962-63 ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை உட்பட, நிதிநிலை அறிக்கைகளை மொரார்ஜி தேசாய் வெளியிட்டு வந்தார்.[2] 1964 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் பெப்ரவரி 29 அன்று தனது பிறந்தநாளில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வழங்கிய ஒரே நிதி அமைச்சராக விளங்கினார். [3] தேசாய் ஐந்து வருடாந்திர திட்டங்களையும் இரு இடைக்காலத் திட்டங்களையும் மூன்று இறுதித் திட்டங்களையும் வழங்கியுள்ளார்.[2]
தேசாயின் பதவி விலகலை அடுத்து, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தானே நிதித்துறைப் பொறுப்பையும் மேற்கொண்டபோது முதல் பெண் நிதி அமைச்சராக அமைந்தார்.[2]
பிரணப் முக்கர்ஜி, முதலில் மாநிலங்களவையிலிருந்து நிதி அமைச்சரானவராக, 1982-83, 1983–84 மற்றும் 1984-85 ஆண்டு அறிக்கைகளை வழங்கினார்.[2]
வி. பி. சிங்கின் பதவி விலகலை அடுத்து 1987-89 ஆண்டுக்கான அறிக்கையை ராஜீவ் காந்தி வழங்கினார். இதன்மூலம் நிதிநிலை அறிக்கையை வழங்கிய , தனது அன்னை மற்றும் தாத்தாவினை அடுத்து, மூன்றாவது பிரதமராக விளங்கினார். [2]
என்.டி.திவாரி 1988-89, எஸ். பி. சவான் 1989-90, மது தண்டவதே 1990-91 ஆண்டு அறிக்கைகளை வெளியிட்டனர்.[2]
தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் நிதி அமைச்சர் பொறுப்பேற்ற மன்மோகன் சிங்1991-92ஆம் ஆண்டிற்கான இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.[2]அரசியல் காரணங்களால் மே 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று இந்திய தேசிய காங்கிரசு மீண்டும் ஆட்சியில் அமர, மன்மோகன்சிங் 1991-92 ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.[2]
[தொகு] தாராளமயமாக்கலுக்குப் பின்னர்
மன்மோகன் சிங் தனது அடுத்த வரவு செலவுத்திட்டம் 1992–93 முதல் இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிட்டார்.[4] உச்சபட்ச சுங்கத் தீர்வையை 300+ விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைத்தார். முதலீட்டுப் பொருள்களுக்கும் திட்ட நிதியங்களுக்கும் சலுகைகள் அளித்தார்.[2]
1996 மக்களவைத் தேர்தல்களில் வென்று காங்கிரசல்லாத ஆட்சி பொறுப்பேற்றது. எனவே 1996-97 ஆண்டுக்கான இறுதி வரவுசெலவுத் திட்டம் தமிழ் மாநில காங்கிரசின் பி.சிதம்பரத்தால் வழங்கப்பட்டது.[2]
ஐ. கே. குஜரால் தலமையேற்ற அரசின் கவிழ்தலை கருத்தில்கொண்டு, அரசியலமைப்புச் சிக்கலை தவிர்க்க, ஓர் சிறப்பு நாடாளுமன்றத் தொடர் கூட்டப்பட்டு 197-98ஆம் ஆண்டுக்கான சிதம்பரத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எந்தவொரு விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது. [2]
மார்ச்சு 1998 பொதுத் தேர்தல்களை அடுத்து நடுவண் அரசமைத்த பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்கா 1998-99 ஆண்டுக்கான இடைக்கால மற்றும் இறுதி வரவு செலவுத் திட்டங்களை வழங்கினார்.[2]
1999 தேர்தல்களில் மீண்டும் வென்று சின்கா நிதி அமைச்சராக அடுத்த, 1999-2000 முதல் 2002-2003 வரை, நான்கு வரவு செலவுத் திட்டங்களை வழங்கினார்.[2] தேர்தல்கள் காரணமாக இடைக்கால அறிக்கையை மே 2004ஆம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் அளித்தார்..[2]
[தொகு] வழங்கப்படும் நேரம்
2000 ஆண்டுவரை ஒன்றிய வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டு வந்தது. இது பிரித்தானியர்களின் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டது. பிரித்தானிய நாடாளுமன்றம் மதிய நேரத்தில் ஒப்புமை அளித்தபிறகு ஐந்தரை மணி வேறுபாட்டால் இந்தியாவில் மாலை வேளையில் வெளியானது.
அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலமைந்த தேசிய சனநாயகக் கூட்டணியின் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா இதனை மாற்றி 2001ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை காலை 11 மணிக்கு வழங்கினார்.[5]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://indiacode.nic.in/coiweb/welcome.html
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 "Chidambaram to present his 7th Budget on Feb. 29". The Hindu. 2008-02-22. http://www.hindu.com/thehindu/holnus/002200802221741.htm. Retrieved 2008-02-22.
- ↑ "The Central Budgets in retrospect". Press Information Bureau, Government of India. 2003-02-24. http://pib.nic.in/feature/feyr2003/ffeb2003/f240220031.html. Retrieved 2008-02-22.
- ↑ "Meet Manmohan Singh, the economist". [http://www.rediff.com Rediff.com. 2004-05-20. http://www.rediff.com/money/2004/may/20man2.htm. Retrieved 2008-02-22.
- ↑ "Budget with a difference". 2001-03-17. http://hindu.com/thehindu/2001/03/17/stories/13171101.htm. Retrieved 2009-03-08.
[தொகு] வெளியிணைப்புகள்
- ஆண்டு அறிக்கைகள்
- பிற ஆவணங்கள்