இந்தியா நிலக்கரி நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | அரசு நிறுவனம் பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1975 |
| தலைமையகம் | 10 நேதாஜி சுபாஷ் சாலை, கொல்கத்தா, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
| முக்கிய நபர்கள் | என்.சி. ஜா சேர்மன் மற்றும் நிருவாக இயக்குனர் |
| தொழில்துறை | நிலக்கரி, பழுப்பு நிலக்கரி |
| உற்பத்திகள் | நிலக்கரி |
| வருமானம் | ▲ |
| நிகர வருமானம் | ▲ |
| பணியாளர் | 397,138 (31 March 2010) |
| இணையத்தளம் | Coalindia.in |
இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) (முபச: 533278, தேபச: COALINDIA) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.