இந்தியா-ஜப்பான் உறவுகள்
இந்தியா |
சப்பான் |
இந்தியாவும் ஜப்பானும் காலம்காலமாக நல்லுறவுகளைப் பேணிவந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஜப்பானும் கலாச்சார பரிமாற்றங்களை பகிர்ந்துள்ளன. குறிப்பாக ஜப்பானின் முக்கிய சமயமான புத்த மதம் இந்தியாவில் பிறந்த புத்தரால் உருவாக்கபட்டதாலும் அதிக பிணைப்புகளை கொண்டுள்ளதற்கு ஒரு காரணமாக உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் இராணுவமும் சுபாசு சந்திர போஸின் தலைமையில் துவங்கப்பட்ட இந்திய இராணுவத்துடன் கூட்டமைத்து பிரித்தானியப் படையை எதிர்த்தது. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் ஜப்பானும் முன்னிலையில் உள்ளது.
ஜப்பானிய நிறுவனங்களான சோனி, டொயோட்டா, ஹோண்டா போன்றவை இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளன. ஜப்பான் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய வியாபார சந்தையாக விளங்குகிறது. ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் கூட்டு நிறுவனமாக மாருதி சுசூக்கி என்கிற பெயருடன் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
வெளியிணைப்புகள் [தொகு]
- ஜப்பான்-இந்தியா உறவுகள் ஜப்பான் வெளிவிவகாரத்துறை அமைச்சு
- Japan keen on stepping up ties with India