இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்றவை இந்தியாவிலுள்ள சில முக்கியமான மாநகரங்களாகும். போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை இந்நகரங்கள் சந்திக்கும் பொதுவான இடையூறுகளாகும்.

இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.

மும்பை[தொகு]

முதன்மைக் கட்டுரை: மும்பை

மும்பை (மராத்தி: मुंबई, Mumbaī , ஐபிஏ:[ˈmʊm.bəi] ), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.[1] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது .[2] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.[3]

தில்லி[தொகு]

முதன்மைக் கட்டுரை: தில்லி

தில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.

கொல்கத்தா[தொகு]

முதன்மைக் கட்டுரை: கொல்கத்தா

கொல்கத்தா (வங்காள: কলকাতা ) (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4]. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[5] கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும் .[6]

சென்னை[தொகு]

முதன்மைக் கட்டுரை: சென்னை

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

பெங்களூரு[தொகு]

முதன்மைக் கட்டுரை: பெங்களூரு

பெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[7] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.

ஐதராபாத்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐதராபாத்_(இந்தியா)

ஐதராபாத் (தெலுங்கு: హైదరాబాద్, உருது: حیدرآباد) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகம்: மிகப்பெரும் நகரங்களும் ஊர்களும் மற்றும் அவற்றின் மக்கள்தொகை தரவுகளும் (2009)". உலக விவரச்சுவடி. மூல முகவரியிலிருந்து 2010-01-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-28.
  2. "நகர மக்கள்தொகை 750,000 வசிப்போர் அல்லது கூடுதல் உள்ளவை - 2007 (1950-2025) (இந்தியா)". பொருளியல் மற்றும் சமூக செயல்கள் துறை(ஐக்கிய நாடுகள்). பார்த்த நாள் 2009-06-09.
  3. Manoj, P. (2009-04-12). "Kept out of bidding for JN Port project, Adani Group files plea". Mint. http://www.livemint.com/2009/04/12212503/Kept-out-of-bidding-for-JN-Por.html. பார்த்த நாள்: 2009-06-09. 
  4. "National Portal of India : Know India : State and UTs".
  5. The Monthly Repository and Library of Entertaining Knowledge. 1833. p. 338. http://books.google.co.in/books?id=F8URAAAAYAAJ&dq=Kolkata+east+bank+of+river+Hooghly&source=gbs_summary_s&cad=0. 
  6. "World Urbanization Prospects: The 2005 revision" (PDF).
  7. "India: largest cities and towns and statistics of their population". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2012-02-09 அன்று பரணிடப்பட்டது.
  8. CHMC ஐ A-1 தர நகரமாக மேம்படுத்தப்பட்டது. வீட்டு வாடகை மற்றும் நஷ்ட ஈடு ஒதுக்கீட்டுக்காக இது செய்யப்பட்டது.". செலவு துறை. நிதி அமைச்சரவை. 10 அக்டோபர். 2007