இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் படி இந்திய ஏற்றுமதியில் 58.1%, இந்திய இறக்குமதியில் 62.1% பங்குவகிக்கும் பதினைந்து மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளின் பட்டியல் இதுவாகும். நேரடி அந்நிய முதலீடுகளை கணக்கில் கொள்ளாமல் வர்த்தகத்தின் மூலம் டிசம்பர் 2010படி கணிக்கப்பட்ட மதிப்புகளாகும்.[1]

நாடு ஏற்றுமதி இறக்குமதி மொத்த வர்த்தகம்
 ஐக்கிய அரபு அமீரகம் 34,349.10 32,753.16 67,102.26
 சீனா 19,615.85 43,479.76 63,095.61
 ஐக்கிய அமெரிக்கா 25,548.40 20,050.72 45,599.12
 சவூதி அரேபியா 5,227.19 20,385.28 25,612.46
 சுவிட்சர்லாந்து 677.56 24,802.00 25,479.55
 ஆங்காங் 10,329.65 9,415.40 19,745.06
 செருமனி 6,758.84 11,891.37 18,650.20
 சிங்கப்பூர் 10,302.71 7,139.31 17,442.02
 இந்தோனேசியா 6,245.33 9,918.63 16,163.96
 பெல்ஜியம் 6,296.21 8,609.82 14,906.02
 தென் கொரியா 4,140.37 10,475.29 14,615.66
 சப்பான் 5,191.23 8,632.03 13,823.26
 ஈரான் 2,742.46 10,928.21 13,670.67
 நைஜீரியா 2,259.09 10,787.72 13,046.81
 ஐக்கிய இராச்சியம் 7,140.52 5,396.78 12,537.30

அமீரகமும் சவுதி அரேபியாவும் தனித் தனி நாடுகளாக கணக்கிடப்பட்டு, அவை அடங்கிய வளைகுடா கூட்டுறவுச் சபையைப்(GCC) பட்டியலில் சேர்க்கவில்லை. இதனை ஒரு பொருளாதார நிறுவனமாகக் கொண்டால், ஆண்டுக்கு $100 பில்லியன் வர்த்தகம் செய்யும் வளைகுடா கூட்டுறவுச் சபை தான் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளியாகும்.[2]

அதேப்போல ஒரு வணிக நிறுவனமாகக் கொண்டால், €52.9 பில்லியன் வர்த்தகம் புரியும் ஐரோப்பிய ஒன்றியம் தான் இரண்டாவது பெரிய கூட்டாளியாகும்[3]. மேற்கண்ட பட்டியலிலுள்ள ஜெர்மனி, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் இவ்வொன்றியத்திற்குள் அடங்கும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]