இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டம்.


இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 இந்திய நாட்டிலுள்ள மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தபட்ட சட்டமாகும். சட்ட எண் 10/1994[1][2]1994,சனவரி 10)[1].

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றையும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கும், அத்துடன் தொடர்புள்ள அல்லது சார்புறுபான பொருட்பாடுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது.

இந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.

  • 1.அதன்படி இச்சட்டம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993.,[1] என அழைக்கப்படுகின்றது.
  • 2.இந்தியா முழுமையும் அளாவி நிற்கும் சட்டம்.
    • வரம்புரையாக ;ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7 வது அட்டவணை ப்ட்டியல் 1 அல்லது பட்டியல் 3 இல் எந்நளவுக்கு அளவிடப்பட்டுள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே அந்த மாநிலத்திற்கு பொருந்தும்.
  • 3. இந்தச் சட்டம் செப்டம்பர் 23, 1993,[1] ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததாக கொள்ளப்படுதல் வேண்டும்.


செயற்பொருள் விளக்கங்கள்[தொகு]

  • செயற்பொருள் விளக்கங்கள் சில-;
    • (இ) ஆணையம்[1] (கமிசன்) என்பது பிரிவு 3 இன் படி அமைக்கபெற்ற தேசிய மனிதவுரிமை ஆணையம் என்பது பொருள்.
    • (ஈ) மனித உரிமைகள் (யூமன் ரைட்ஸ்) என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அல்லது (சர்வதேச) அனைத்து நாடுகளின் ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள அல்லது இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களினால் அமல்படுத்தப்படும் உயிர் தன்னுரிமை, சமத்துவம், கண்ணியம், ஆகியவை தொடர்பான உரிமைகள் என்று பொருள்.


    • (உ) மனித உரிமைகள் நீதிமன்றம் எனபது பிரிவி 30 இன் படி [1]குறித்துரைக்கப்பட்ட மனிதவுரிமை நீதிமன்றங்கள் என்று பொருள்.


    • (எ) உறுப்பினர் என்பது தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்களையும் குறிக்கும்.
    • (ஏ) தேசிய சிறுபான்மையினர் ஆணையம்[1] 1992 பிரிவு 3 இன் படி அமைக்கப்பட்ட ஆணையத்தைக் குறிக்கும்.
    • (ஐ) பட்டியல் மரபினர் (அ) பழங்குடியினர்[1] என்பது 338 ஆவது பிரிவின் படி பட்டியலிடப்பட்டவர்களைக் குறிக்கும்
    • (ஒ) தேசிய மகளிர் ஆணையம்[1] என்பது தே.ம.ஆ சட்டம் 1990, பிரிவு 3 இன் படி அமைக்கப்பட்ட ஆணையத்தைக் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 வேங்கடாசலம், புலமை (செப்டம்பர்,2007). மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகள். சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98: தாமரை பப்லிக்கேசன் பி லிட்,. பக். xii+100=112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88049-78-6. 
  2. தேசிய மனித உரிமை ஆணையம், மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் பி டி எப்பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-04-2009