இணையவழி விளம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இணைய விளம்பர அமைப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணையவழி விளம்பரம் (Online advertising) என்பது இணையம் மற்றும் உலகளாவிய வலையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பரிமாறப்படும் செய்தியாகும். உதாரணமாக தேடல் முடிவுப் பக்கத்திற் காட்டப்படும் விளம்பரங்கள், வலைப்பூக்களில் காட்டப்படும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில்க் காட்டப்படும் விளம்பரங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இணைய விளம்பர அமைப்புகள்[தொகு]

இணைய தளப் பயன்பாட்டாளர்களைக் கவரும் வழியில் இணைய தளங்களில் பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விளம்பரங்களை வணிக நிறுவனங்களிடமிருந்து, இணைய தளம் நடத்துவோர்க்குப் பெற்றுத் தரும் முகவர்களாகச் செயல்படும் நிறுவனங்கள் இணைய விளம்பர அமைப்புகள் என்று கூறலாம். இந்த மாதிரியான விளம்பர அமைப்புகள் பல இருக்கின்றன. பெரிய இணைய நிறுவனங்கள் கூட இது போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன.

இணைய விளம்பர வடிவங்கள்[தொகு]

இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் விளம்பரதாரர்களிடம் விளம்பரங்களைப் பெற்றுக் கொண்டு அதை

 1. எழுத்து வடிவ விளம்பரம்
 2. பிரதிமை விளம்பரம்
 3. காட்சி விளம்பரம்.
 4. இணைப்பு அலகுகள் விளம்பரம்
 5. பரிந்துரை விளம்பரம்
 6. கருத்து அலகுகள் விளம்பரம்

எனும் தலைப்பின் கீழ் பல அளவுகளில் பிரித்து அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இணைய தளங்களுக்கு அந்த இணைய தளத்தின் உள்ளடக்கங்களுக்குத் தகுந்த விளம்பரங்களை வழங்குகின்றன.

எழுத்து வடிவ விளம்பரம்[தொகு]

விளம்பரக் குறிப்புகள் எழுத்துக்களாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பிரதிமை வடிவ விளம்பரம்[தொகு]

விளம்பரத்திற்கான குறிப்புகள் உருவப் படமாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்கு செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

காட்சி விளம்பரம்[தொகு]

விளம்பரக் குறிப்புகள் படக்காட்சிகளாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்கு செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இணைப்பு அலகுகள் விளம்பரம்[தொகு]

ஒரு சொல் குறிப்புகளாக சில நிறுவனங்களின் விளம்பர அலகுகள் இருப்பதுடன் தனித்தனியான அலகுகளுக்கான அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பரிந்துரை விளம்பரம்[தொகு]

விளம்பரத்திற்கான குறிப்புகள் உருவப் படமாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்கு செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது

கருத்து அலகுகள் விளம்பரம்[தொகு]

விளம்பரத்திற்கான கருத்துக்கள் ஒன்றாக உள்ள விளம்பர நிறுவனங்களின் குறிப்புகள் சில சேர்க்கப்பட்டு அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லும்படி இணைப்பு கொடுக்கப்பட்டு இவ்விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

விளம்பர அளவுகள்[தொகு]

இணையதளங்களில் விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் தரும் பொதுவான விளம்பர அளவுகள் (பிக்சல்)கீழ்காணும் வடிவத்தில்தான் இருக்கின்றன.

 • 728 X 90
 • 300 X 250
 • 160 X 600
 • 120 X 600
 • 468 X 60
 • 120 X 240
 • 250 X 250
 • 336 X 280
 • 234 X 60
 • 120 X 90
 • 180 X 150
 • 120 X 60

இவற்றில் முதலிலுள்ள ஆறு அளவுகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. [1]

விளம்பரக் கட்டணம்[தொகு]

இந்த விளம்பரங்களில் பரிந்துரை விளம்பரம் ஒன்றைத் தவிர மற்ற விளம்பரங்கள் அனைத்தும் இணைய பயன்பாட்டாளரால் சொடுக்கப்பட்டு அந்த விளம்பர நிறுவனத்தின் தளம் பார்வையிடப்பட்டால் அந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்கும் இணைய தளத்திற்கு குறிப்பிட்ட அளவு விளம்பரக் கட்டணம் அளிக்கப்படுகிறது. ஆனால், பரிந்துரை விளம்பரங்களுக்கு இப்படி விளம்பரக் கட்டணம் அளிக்கப்படுவதில்லை. இணையப் பயன்பாட்டாளர் பரிந்துரை விளம்பரத்தைச் சொடுக்கி அந்த நிறுவத்தின் இணைய தளத்திற்குச் சென்று விளம்பரதாரர் விற்பனை செய்யும் பொருளைச் சந்தைப்படுத்துபவராக அல்லது அதில் விளம்பரதாரரின் வாடிக்கையாளராகவோ இணைந்து கொள்ள வேண்டும். அப்படி இணைந்து கொண்டால் மட்டுமே இணைய விளம்பரத்தை வெளியிட்ட இணைய தளங்களுக்கு விளம்பரக் கட்டணம் அளிக்கப்படுகிறது. ஆனால் இவ்வகை விளம்பரக் கட்டணம் மற்ற விளம்பரக் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக அளிக்கப்படுகிறது. சில விளம்பரங்களுக்கு வெளியிடப்பட்ட இணைய தளத்தின் பக்கம் பார்வையிடப்பட்டாலே விளம்பரக் கட்டணம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வகை விளம்பரம் மிகக் குறைவாகவே இருக்கிறது. விளம்பரக் கட்டணம் குறிப்பிட்ட அளவுக்குச் சேர்ந்த பின்பு விளம்பரங்களை வெளியிட்ட இணைய தளங்களின் வங்கிக் கணக்கிற்கு இணைய விளம்பர அமைப்புகள் விளம்பரக் கட்டணங்களை வழங்குகின்றன.

விளம்பரக் குறிப்புகள்[தொகு]

இந்த விளம்பரங்கள் கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகை வாக்கியக் குறிப்பு மொழியாக (HTML-Hyper Text Markup Language) அளிக்கப்படுவதால் விளம்பரத்தை வெளியிடும் இணைய தளத்தினர் இணையதள வடிவமைப்பின்போது ஒரு முறை மட்டும் விளம்பரம் வெளியிட விரும்பும் இடத்தில் தேவையான அளவுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இணைய விளம்பரங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. விளம்பரங்களை அளித்துக் கொண்டிருக்கும் இணைய விளம்பர அமைப்புகளே இந்தப் பணியைச் செய்து கொள்கின்றன.

தமிழ் மொழிக்கான விளம்பரம்[தொகு]

இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் இணைய விளம்பர அமைப்புகளில் முன்னிலையில் இருக்கும் அமைப்பு கூக்ளி ஆட்சென்ஸ் (Google AdSense) எனும் அமைப்புதான். இந்த அமைப்பு மற்ற இணைய விளம்பர அமைப்புகள் வழங்கும் விளம்பரக் கட்டணங்களை விட அதிகமான கட்டணங்களை அளிக்கிறது. ஆனால் இந்த அமைப்பு தமிழ் மொழியிலான இணைய தளங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதில்லை. இந்த அமைப்பு சீனா , குரோசியன் , செக் , டானிஷ் , டச்சு , ஆங்கிலம் , பின்னிஷ் , பிரெஞ்ச் , ஜெர்மன் , கிரீக் , ஹெப்ரூ , ஹங்கேரியன் , இத்தாலி , ஜப்பானிய_மொழி , கொரியன் , நோர்வே , போலிஷ் , போர்ச்சுக்கீஷ் , ரோமானியா , ரஷ்யா , சுலோவக் , ஸ்பானிஷ் , சுவேதிஷ் , துர்க்கிஷ் என்று குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே விளம்பரங்களை வழங்கி வருகின்றன.

தமிழ் மொழிக்கு வேறு சில சிறிய இணைய விளம்பர அமைப்புகள் விளம்பரங்களை அளிக்கின்றன. ஆனால் இவை அளிக்கும் விளம்பரக் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால் சிறந்த பலன் ஏதும் கிடைப்பதில்லை. இதுபோல் தமிழ் மொழிக்கான இணைய தளங்களுக்குத் தமிழ் மொழி சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலிருக்கும் நிறுவனங்களிடமிருந்தும் தனியான விளம்பரம் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழ் இணையச் சிற்றிதழ்களுக்கு விளம்பரங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

தமிழ் மொழி விளம்பரக் குறைபாடுகள்[தொகு]

 • தமிழ் மொழியில் இருக்கும் இணைய தளங்கள் குறிப்பிட்ட தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தாமல் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களுக்கு இலகுவானது என்று கருதிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பயன்பாட்டுப் பட்டியலில் தமிழ் ஒருங்குறி எழுத்துருவைத் தவிர மற்ற எழுத்துருக்கள் வேற்றுமொழி எழுத்துக்களாகக் கணக்கிடப்பட்டதால் தமிழுக்கான இடம் பின்னால் போய்விட்டது.
 • இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையாக அந்த நாட்டின் தாய்மொழிகளிலான தளங்களையே விரும்பிப் பார்க்கின்றனர். பலமொழிகள் பயன்படுத்தப்படும் நாடுகளில் பொதுமொழியாகப் பயன்படுத்தும் ஆங்கிலத்திலான தளங்களையேப் பார்த்து வருகின்றனர். இதனால் உலக இணையப் பயன்பாட்டில் ஒரே மொழியைக் கொண்டிருக்கும் நாடுகள் முதலிடங்களில் இருக்கின்றன. ஆங்கிலம், சீனா, ஸ்பானிஷ், ஜப்பானிஷ், பிரெஞ்ச், போர்ச்சுக்கீசு, ஜெர்மன், அரபி, கொரியன், ரஷ்யன் மொழிகள் உலகத்தின் இணையப் பயன்பாட்டில் முதல் 10 இடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற. இதனால் இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் தேசிய ஆட்சி மொழியாகவும், இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் மாநில ஆட்சி மொழியாகவும், மலேசியா , தென் ஆப்பிரிக்கா , மொரிஷியஸ் , பிஜீ போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் இருக்கும் தமிழ் மொழி உலகில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் மொழிகளில் ஒன்றாக இருந்த போதிலும் இணையப் பயன்பாட்டில் பின்தங்கியே இருக்கிறது.
 • இந்தியாவில் இணையதளப் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் இணையத்தில் பெரிய நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் பொழுது குறிப்பிட்ட மாநில மொழிகளைப் பயன்படுத்தாமல் ஆங்கில மொழியையேப் பொதுவாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்கின்றன. இந்த விளம்பரங்களும் இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில தளங்களுக்கே அதிக அளவில் கிடைக்கின்றன. மாநில அளவிலான நிறுவனங்கள் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கே முக்கியத்துவமளித்து விளம்பரங்கள் அளிக்கின்றன. மேலும் தமிழிலான இணைய ஊடகங்களின் பயன்பாடு இங்கு குறைவாக இருப்பதால் இணைய ஊடகங்களில் விளம்பரங்கள் அளிக்க இந்நிறுவனங்கள் விரும்புவதில்லை.
 • அச்சு ஊடகங்களில் வரும் விளம்பரங்களை விரும்பினால் முழுமையாகப் பார்வையிடலாம். காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் இணையத்தில் வரும் விளம்பரங்கள் இந்த இரண்டு நிலையுமில்லாமல் பயன்பாட்டாளர் விருப்பத்தின் அடிப்படையில் அந்த விளம்பரத்தைச் சொடுக்கி குறிப்பிட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. இதனால் விளம்பர நிறுவனங்கள் இணைய ஊடகங்களில் விளம்பரம் செய்ய முன் வருவதில்லை. ஆனால், அச்சு ஊடகம், காட்சி ஊடகத்தை விட விளம்பரம் செய்த நிறுவனம் குறித்த முழுத் தகவல்களையும் அந்த இணைய தளத்திற்குச் சென்று பெறமுடியும் வாய்ப்பு இணைய ஊடகத்தில் இருக்கின்றது என்றாலும் தமிழ் இணையப் பயன்பாடுகள் குறைவாக இருப்பதால் தமிழ் மொழி சார்ந்த இணைய ஊடகங்களுக்கு விளம்பர வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.

ஆதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. கோ. சந்திரசேகரன் எழுதிய “இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? நூல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=இணையவழி_விளம்பரம்&oldid=1612927" இருந்து மீள்விக்கப்பட்டது