இணைய இணைப்பைப் பகிர்தல்
இணைய இணைப்பைப் பகிர்தலானது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்பைப் பகிரும் வழங்கியாக (சேவர்) வின்டோஸ் சேவர் 2003 வெப் எடிசன், டேட்டா செண்டர் எடிசன், இட்டானியம் எடிசன் போன்றவறை இயங்காது. [1]. இதுபோன்றே வின்டோஸ் எக்ஸ்பி 64பிட் [2] பதிப்பும் சொதனையில் இருக்கும் வி்ன்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 [3] வழங்கியாகச் செயல்படுவதில் சில பிரச்சினைகள் அவதானிக்கப்பட்டுள்ள பொழுதிலும் தொடர்ந்தும் இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படும். இதை விண்டோஸ் இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.
குறிப்பு:இரண்டு கணினிகள் மாத்திரமே இருந்தால் இரண்டு கணினியையும் குறஸோவர் (Cross-over) கேபிள் மூலம் இணைத்துவிடலாம் இதற்கு சுவிச் அவசியம் இல்லை.
[தொகு] விண்டோஸ் 2000/XP/2003 பதிப்புகளில் செய்முறை
- பயனருக்கு நிர்வாக அணுக்கம் இருத்தல் வேண்டும். நிர்வாக அணுக்கம் இல்லாதவர்கள் நிர்வாகியை அணுகுவதன் மூலமே அல்லது நிர்வாகியின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்வதன் மூலமோ கணினியில் நிர்வாகியாக உள்நுளையவும்.
- Start -> All Programs ->Connect to -> Show All Connections
- இணைய இணைப்பானது பகிரவிருக்கும் இணைப்பை Right Click செய்யவும்
- Properties ஐத் தேர்ந்தெடுக்கவும்
- Internet Connection Sharing in கீழ் Allow other network users to connect through this computers internet connection என்பதைத் தேர்வு செய்யவும்
- இப்போது, வலையமைப்பில் ஏனைய கணினிகள் யாவும் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS வழங்கியைப் பெறுமாறிருந்தால் ஓர் இணைய இணைப்பில் இருந்து எல்லாக் கணிகளும் (லினக்ஸ் உட்பட) இணையத்தை அணுக முடியும்.
- கணினிகளுக்கு வழங்கிய ஐபி முகவரிகளைக் காணவிரும்பினால் start -> Run -> %windir%\system32\drivers\etc என்பதைத் தட்டச்சுச் செய்தோ அல்லது பிரதிபண்ணி ஒட்டியோ ஓகே பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் அங்கிருக்கும் hosts.ics என்ற கோப்பினை Notepad மூலம் திறக்கவும்.
[தொகு] பிரச்சினைகளும் தீர்வுகளும்
- வாங்கியானது (சர்வர்) 192.168.0.1 ஐபி எணைப் பெற்றுக்கொண்டு ஏனைய கணினிகளுக்கு 192.168.0.x என்றவாறு ஐபி முகவரிகளை வழங்கும். இதில் x என்பது 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்ட ஓர் எண்ணாகும். இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படாவிட்டால் அல்லது குழறுபடிக்களை விளைவித்தால் மாத்திரம் வாங்கிகளின் ஐபி முகவரிகளாக 192.168.0.x ஐ (x = 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்டது) ஐயும் Default gateway ஆக 192.168.0.1 ஐயும் சப்நேட் மாஸ்க் ஆக (255.255.255.0) ஐயும் வழங்கவும்.
- மேலே குறிப்பிட்டதைவிட Start -> Run -> services.msc எனத் தட்டச்சுச் செய்து Windows Firewall/Internet Connection Sharing (ICS) தானியக்க முறையில் ஆரம்பித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்ம்.
- இவ்வகை இணைப்புக்களில் பயனர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதோ எந்த இணையத்தளத்தினைப் பார்வையிடுகின்றார்களோ அல்லது மொத்த இணைப்பு வேகத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா எனக் கண்காணிப்பதோ அவர்களுக்கான இணைய அணுக்க வேகத்தை மட்டுப்படுத்துவதோ இங்கு இயலாத காரியம். இவை கேரியோ வின்ரவுட் பயர்வால் போன்ற மென்பொருட்களிலும் வேறு இவ்வகை வேலைகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட மென்பொருடகள் ஊடாகவே செய்யலாம் இங்கு இவ்வகை வசதிகள் இல்லை.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ வலையமைப்புப் பாலம் மைக்ரோசாப்ட் ரெக்நெட் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007
- ↑ இணைய இணைப்பைப் பகிர்தல் அணுகப்பட்டது 9 டிசம்பர் 2007
- ↑ இணைய இணைப்பகிரும் வழங்கியாக விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 இயங்கவில்லையா? அணுகப்பட்டது டிசம்பர் 27, 2007