இணைக்கப்படாத தூர மேற்கு வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைக்கப்படாத தூரமேற்கு வட்டாரம்
Unincorporated Far West Region

நியூ சவுத் வேல்ஸ்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதன் அமைவு
பரப்பளவு: 93299.2 கிமீ² (36,023.0 சது மைல்)
பிரதேசங்கள்: தூரமேற்கு
மாநில மாவட்டம்: மரி-டார்லிங்
நடுவண் தொகுதி: பார்க்ஸ்


இணைக்கப்படாத தூர மேற்கு வட்டாரம் (Unincorporated Far West Region) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி ஆஸ்திரேலியாவின் எந்த ஒரு உள்ளூராட்சிப் பகுதியிலும் இது அடங்காது. இதனால் இது இணைக்கப்படாத வட்டாரம் என அழைக்கப்படுகிறது. இவ்வ்வட்டாரம் தூர மேற்கில் அமைந்துள்ளது. இங்கு டிபூபுரா போன்ற சிறு நகரங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டாரம் புரோக்கன் ஹில் என்ற பெரு நகரைச் சுற்றி இருந்தாலும், புரோக்கன் ஹில் இவ்வட்டார ஆட்சியினுள் வரவில்லை.

தூர மேற்கு வட்டாரத்தின் மொத்தப் பரப்பளவு 93,299.2கிமீ² [1], இது கிட்டத்தட்ட ஹங்கேரியின் பரப்பளவிற்கு ஒப்பானதாகும். 2001 மக்ககள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு 2,896 பேர் வாழ்கிறார்கள்[2]. இங்குள்ள ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 134.6 ஆண்கள் வாழ்கின்றனர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Australian Bureau of Statistics (2006-11-20). "ABS 2004 National Regional Profile : Unincorporated NSW (Local Government Area)". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2007-06-13.
  2. ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களம் (9 March 2006). "Unincorporated NSW (Local Government Area)". 2001 Census QuickStats. பார்க்கப்பட்ட நாள் 2007-06-13.