இடை முன் இதழ்குவி உயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இடை முன் இதழ்குவி உயிர் | |
|---|---|
| ø̞ | |
| அ.ஒ.அ எண் | 310 430 |
| குறியேற்றம் | |
| உள்பொருள் (decimal) | ø̞ |
| ஒருங்குறி (hex) | U+00F8 U+031E |
|
|
|
| முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
| மேல் | |||||
| கீழ்-மேல் | |||||
| மேலிடை | |||||
| இடை | |||||
| கீழ்-இடை | |||||
| மேல்-கீழ் | |||||
| கீழ் | |||||
|
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் •இதழ்குவி உயிர். |
|||||
இடை முன் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் [ø], கீழ்-இடையுயிருக்கும் [œ], இடையில் சரியாக இந்த இடை முன் இதழ்குவி உயிர் ஒலியைக் குறிப்பதற்கு அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். பொதுவாக, மேல்-இடையுயிரைக் குறிக்கும் ‹ø› என்னும் குறியீடே இந்த ஒலியைக் குறிக்கவும் பயன்படுகிறது. துல்லியம் தேவைப்படும் இடங்களில், [ø̞], [œ̝] என்பன போல், ஏற்கெனவே உள்ள குறிகளுக்குத் துணைக் குறிகளை இட்டு எழுதுவது உண்டு.
ஒலிப்பிறப்பு இயல்புகள் [தொகு]
- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் முன் பகுதியில் அமையும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும்.