இடைக்காடனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைக்காடனார் (அல்லது இடைக்காடர்), சங்கத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இடைக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பர். இதனாலேயே இவர் இடைக்காடனார் என்று அழைக்கப்படுகிறார் எனக் கருதலாம். முல்லைத் திணைச் செய்யுள்களைக் கூடுதலாகப் பாடியிருப்பதனால், இவர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன. அவை:

இடைக்காடனார் பாடல்கள்[தொகு]

அகநானூறு 139, 194, 274, 284, 304, 374
குறுந்தொகை 351
நற்றிணை 142, 316
புறநானூறு 42[1]
இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9-ல் 7 முல்லைத்திணைப் பாடல்களும், 2 பாலைத்திணைப் பாடல்களும் உள்ளன. புறப்பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாராட்டியுள்ளார்.

=பாடல் தரும் செய்திகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. இடைக்காடனார் பாடல் புறநானூறு 42
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்காடனார்&oldid=2197798" இலிருந்து மீள்விக்கப்பட்டது