இடியுடன் கூடிய மழை
.
இடியுடன் கூடிய மழை (thunderstorm, அல்லது பொதுவாக storm) எனப்படுவது புவி வளிமண்டலத்தில் இடி அல்லது மின்னலுடன் கூடிய மழையைக் குறிக்கும். இது இடிமின்னல் மழை எனவும் அழைக்கப்படும். புவியைத் தவிர வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களிலும் இது ஏற்படும்.
பொருளடக்கம் |
வாழ்க்கை வட்டம் [தொகு]
குளிர்ந்த வளியை விட வெப்பம் அதிகமான வளி அடர்த்தி குறைந்தது. எனவே வெப்பம் அதிகமான வளி மேலெழும்பும்(இவ்விளைவை வெப்பக் காற்று பலூனில் அவதானிக்கலாம்). வெப்பக் காற்று அதிகளவான நீராவியையும் கொண்டிருக்கும். இவ்வளி மேலெழும்பும் போது இந்நீராவி ஒடுங்கி முகில்களை உருவாக்கும். வளிமண்டலத்தின் இவ்வாறான நிலையற்ற தன்மை தொடருமாயின் மழையை உருவாக்கும் திரள் முகில் தோன்றும். இவை மின்னல் மற்றும் இடியை உருவாக்கும். பொதுவாக இடியுடன் கூடிய மழை உருவாக பின்வரும் காரணிகள் அவசியமாகும்.
- நிலையற்ற தன்மை கொண்ட வளித் திரள்
- ஈரப்பதன்
- மேலெழும்ப உதவும் சக்தி (வெப்பம்)
திரள் முகில் நிலை [தொகு]
இதுவே இடியுடன் கூடிய மழையின் முதலாவது நிலை ஆகும். இங்கு ஈரப்பதனுடன் கூடிய காற்று மேலெழுவதால் உருவாகும். இவ்வாறு உருவாகும் நீர்த்துளிகளின் வெப்ப விளைவினால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும். பொதுவாக இந்நிலையில் 5×108 kg நீராவி புவியின் வளிமண்டலத்தில் மேலெழும்பும் விசை காரணமாகச் சேர்க்கப்படும்.
வளர்ச்சியடைந்த நிலை [தொகு]
சூடாக்கப்பட்ட வளி தொடர்ந்து மேலெழும்பி, தொடர்ந்தும் மேலெழும்ப முடியாத நிலையை அடையும். பொதுவாக அடிவளிமண்டலத்தின் எல்லையில் இது அமைந்திருக்கும். இதனால் வளி அவ்விடத்தில் பரவி ஒரு அடைக்கல் வடிவத்தை இடியுடன் கூடிய மழையின் வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொடுக்கும். சிறிய நீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து பின்னர் உறைந்து பனிக்கட்டிகளை உருவாக்கும். இவை புவியீர்ப்பின் காரணமாக கீழே விழும்போது உருகி மழையைக் கொடுக்கின்றது. சிலவேளைகளில் ஆலங்கட்டி மழை அல்லது சுழற் காற்றுகளும் இந்நிலையில் உருவாகும். பொதுவாக அதிகரிக்கும் மழை காரணமாக முகில் தனது அழிவடையும் நிலையை அடையும். சிலவேளைகளில் மேலெழும்பும் வளி கீழ்வரும் வளியில் இருந்து காற்று காரணமாகப் பிரிக்கப்படுமாயின், மீகலன் முகிலாக மாற்றமடைந்து தனது நிலையை பல மணித்தியாலங்கள் தக்கவைத்துக் கொள்ளும்.
அழிவடையும் நிலை [தொகு]
அழிவடையும் நிலையில் கீழ் வரும் வளித்திரளால் முகில் ஆதிக்கம் செலுத்தப்படும். இது குளிர்ந்த காற்றையும் மழையையும் கொண்டுவரும். இதனால் 20-30 நிமிடங்களில் இடியுடன் கூடிய மழையின் ஆயுட்காலம் முடிவடையும்.
வகைகள் [தொகு]
இடியுடன் கூடிய மழை அதன் முகில் வகைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.
ஒருகலன் முகிலின் இடியுடன் கூடிய மழை [தொகு]
ஒரு மேலெழும்பும் காற்றை மாத்திரம் கொண்ட முகிலைக் கொண்ட இடியுடன் கூடிய மழையே ஒருகலன் அல்லது தனிக்கலன் எனப்படும். இவற்றை மிதமான காலநிலைப் பிரதேசங்களில் அதிகமாக அவதானிக்கலாம். சிலவேளைகளில் குளிருடன் கூடிய நிலையற்ற வளித்திணிவுகளிலும் அவதானிக்கலாம். இவை அவ்வளவாகப் பயங்கரமானவை அல்ல. இவை சாதாரணமாக 20 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
பல்கல முகிற்கூட்டம் [தொகு]
இடியுடன் கூடிய மழைகளில் இதுவே மிகவும் பொதுவானதாகும். வளர்ச்சியடைந்த முகில்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும். இவ்வகைக் கூட்டம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீகல முகில்களாக மாற்றமடையலாம்.
மீகல முகிலின் இடியுடன் கூடிய மழை [தொகு]
வேறாகப் பிரிக்கப்பட்ட மேலெழும்பும் மற்றும் கீழ்வரும் வளி நிரல்களை உடைய பெரும் முகிலே மீகல முகிலாகும். இவை பெரும் சேதத்தை உண்டாக்கும் சுழல் காற்றுகளையும் அதிக மழையையும் உண்டாக்கக் கூடியன. இவை பொதுவாக 24 கிமீ வரை பரந்திருப்பவை. இம்முகிலின் காற்றுத் திசை உயரத்திற்கு ஏற்ப வேறுபடக்கூடியது. சிலவேளைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் கூட காற்று வீசலாம். இடியுடன் கூடிய மழைகளில் இதுவே அதிக சக்தி வாய்ந்ததாகும்.
திசை [தொகு]
இடியுடன் கூடிய மழை இரு வகைகளில் பாதையை மாற்றக் கூடியது. வளர்ச்சியடைந்த முகில்கள் அதிக வேகத்துடன் செல்ல மாட்டா.
சீரழிவுகள் [தொகு]
|
இந்த பகுதியில் விரிவாக்கம் தேவைப்படுகிறது. |
இடியுடன் கூடிய மழை பல வகை அனர்த்தங்களை ஏற்படுத்தக்கூடியன. இவை சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
முகிலிலிருந்து நிலத்திற்கு ஊடுருவும் மின்னல் [தொகு]
இடியுடன் கூடிய மழையின் போது அதிகமாக நடைபெறும் நிகழ்வே இதுவாகும். இதில் மிக முக்கிய அனர்த்தம் காட்டுத்தீயாகும். பொதுவாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், வறட்சியின் இறுதியில் இடியுடன் கூடிய மழை சிறிதளவில் பொழியும். அதிகம் ஈரமடையாத மரங்கள் மின்னலின் போது எரிய ஆரம்பிக்கும். சிறிதளவு மழையே பொழிவதால் நெருப்பு அணையாமல் பரவி காட்டுத்தீயாகலாம். இந்நிகழ்வு கலிபோர்னிய பகுதிகளில் அதிகம் நடைபெறும். நேரடி மின்னல் தாக்கத்தாலும் உயிரிழப்புகள் ஏற்படும்.
பெரும் ஆலங்கட்டி மழை [தொகு]
சில முகில்கள் ஆலங்கட்டி மழையை உருவாக்கும். இவை பச்சைநிறத் தோற்றத்தை முகில்களில் உருவாக்கும். இந்நிகழ்வு மலைப்பிரதேசங்களில் அதிகமாக நடைபெறும். இமயமலைகளில் அதிக தடவைகள் நடைபெறுவதாகும். அதிக பாரமுள்ள ஆலங்கட்டியால் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் ஏற்படலாம்