இடியப்ப இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடியப்ப இயந்திரம் என்பது இடியப்பங்களை பிழிந்து தரும் ஒரு மின் இயந்திரமாகும். தயாரிக்கப்பட்ட மாவை இட்ட பின் இது மனித வலுவின்றி, நூற்றுக்கணக்கான இடியப்பங்களை வடிவம் தவறாமல் பிழிந்து தரும்.

இந்த இடியப்ப இயந்திரங்கள் உதவியுடன் மிக வேகமாக, இலகுவாக இடியப்பங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது. இதனால் இது புகலிட நாட்டு தமிழர் உணவகங்கள் பலவற்றிலும் பயன்படுத்தப் படுகிறது. மிக மலிந்த விலையில் இடியப்பம் விற்பனை செய்ய இந்த இடியப்ப இயந்திரங்கள் காரணம் ஆகின.

வகைகள்[தொகு]

இடியப்ப இயந்திரங்களில் முதன்மையாக இரு வகைகள் உண்டு. வீட்டில் செய்யப் பயன்படும் சிறிய கொள்ளவு கொண்டது வீட்டு இடியப்ப இயந்திரம். உணவகத்தில் பயன்படும் பெரிய கொள்ளவுகளைக் கொண்டவை பெரிய இடியப்ப இயந்திரங்கள்.

கண்டு பிடிப்பு[தொகு]

இடியப்ப இயந்திரங்களை தமிழ் இயந்திரவியலாளர் (கள்) உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடியப்ப_இயந்திரம்&oldid=3718665" இலிருந்து மீள்விக்கப்பட்டது