இசுதான்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இசுத்தான்புல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
İstanbul
இஸ்தான்புல்
தொப்கபி அரமனை - ஹேகியா சோபியா - நீல மசூதி
தொப்கபி அரமனை - ஹேகியா சோபியா - நீல மசூதி
துருக்கியில் அமைந்திடம்.
துருக்கியில் அமைந்திடம்.
அமைவு: <span class="geo-dms" title="Maps, aerial photos, and other data for 41°00′44″N Expression error: Unexpected < operator.°Expression error: Unexpected < operator.Expression error: Unexpected < operator.Expression error: Unexpected >= operator.">41°00′44″N Expression error: Unexpected < operator.°Expression error: Unexpected < operator.Expression error: Unexpected < operator.Expression error: Unexpected >= operator. / 41.01224,
நாடு துருக்கியின் கொடி துருக்கி
பகுதி மர்மரா
மாகாணம் இஸ்தான்புல்
தோற்றம் 667 கி.மு., பைசான்ட்டியம் என்று
ரோமன்/பிசன்ட்டீன் காலம் கி.பி. 330, கான்ஸ்டண்ட்டினோப்பிள் என்று
ஒட்டோமான் காலம் 1453, கான்ஸ்டண்ட்டினோப்பிள் மற்றும் பல மொழியிலும் பல பெயர்கள் என்று
துருக்கி குடியரசு காலம் 1930ல் இஸ்தான்புல் என்று பெயர் மாற்றல்
மாவட்டங்கள் 27
பரப்பளவு
 - நகரம் 1,830.92 கிமீ²  (706.9 ச. மைல்)
ஏற்றம் 100 மீ (328 அடி)
மக்கள் தொகை (2007)[1]
 - நகரம் 11
 - அடர்த்தி 6,211/கிமீ² (16,086.4/ச. மைல்)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
EEST (ஒ.ச.நே.+3)
அஞ்சல் குறியீடு 34010 - 34850,
80000 - 81800
தொலைபேசி குறியீடு(கள்) (+90) 212 (ஐரோப்பிய பக்கம்)
(+90) 216 (ஆசிய பக்கம்)
இணையத்தளம்: இஸ்தான்புல் இணையத்தளம்

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே.

மேற்கோள்கள் [தொகு]

  1. Türkiye istatistik kurumu Address-based population survey 2007. Retrieved on 2008-03-19.

மேலும் பார்க்க [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுதான்புல்&oldid=1345212" இருந்து மீள்விக்கப்பட்டது