பனிக் கட்டிக் குடில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இக்லூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பனிக் கட்டிக் குடில்

பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவ்வீடுகள் பொதுவாக ஓர் அரைக்கோள வடிவத்தில் இருக்கும். பனிக் கட்டிக் குடில் பெரும்பாலும், கனடாவின் வட அந்தலையில் வாழ்கின்ற பழங்குடிகளான இனூயிட் மக்களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கே பனிக் கட்டிக் குடில்கள் மாரிகாலத்தில் வேட்டையாடுபவர்களால் தற்காலிக வாழிடங்களாகப் பயன்படுகின்றன.

வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே பனிக் கட்டிக் குடில் கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாகப் பனிக் கட்டிக் குடில் உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்டியின் வெப்பம் கடத்தாத்தன்மை காரணமாக, மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும்.

பனிக் கட்டிக் குடில் வெட்டுமுகப்படம்

மத்திய எஸ்கிமோவர், சிறப்பாக, டேவிஸ் நீரிணையைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது.

கட்டிடக்கலைரீதியில் பனிக் கட்டிக் குடில் தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளை தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன்மூலம் இதன் அரைக்கோளவடிவ "டோம்" ஐக் கட்டியெழுப்ப முடியும்.

"இக்லூ", என்பது இனுக்டிடுட் மொழியில் "வீடு" என்ற பொருள்படும்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்_கட்டிக்_குடில்&oldid=1466334" இருந்து மீள்விக்கப்பட்டது