ஆஸ்திரேலிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்து வந்துள்ளனர். இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெஜெமுங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேறு ஒரு ஆய்வு 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதன் இருந்திருக்கிறான் எனக் கூறுகிறது[1]. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் பிற நாட்டினத்தவர்களுடன் உறுதிப்படவில்லை. அக்கால வரலாறு பரம்பரை வழியாக கதைகள்,நம்பிக்கைகள் மற்றும் பாட்டுக்கள் மூலமே பெறப்படுகின்றன.


புதிய ஒல்லாந்து, 1644ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வரைபடம்

ஆஸ்திரேலியாவின் எழுதப்பட்ட வரலாறு 1606 ஆம் ஆண்டிலிருந்தே கிடைக்கின்றன. அவ்வாண்டு எசுப்பானிய அரசு கப்பலில் பெட்ரோ பெர்னாண்டசு தெ க்யூரோசு என்ற போர்த்துகீசிய மாலுமி இங்கு வந்தார்.அவரே இதனை La Australia del Espiritu Santo (இப்போதைய வனுவாட்டு) என அழைத்தார்[2]. அந்தக் கப்பல் பயணத்தில் வந்த ஒரு நாவாய் வழிதவறி டொரெஸ் நீரிணை வழியாகச் செல்லும்போது ஆஸதிரேலியாவின் வட கடற்கரையை கண்டிருக்கலாம் என கருதப்படுகிறது[3]. இந்த கண்டுபிடிப்புகள் பல கடல் மாலுமிகளின் ஆர்வத்தைத் தூண்ட நெதர்லாந்தைச் சேர்ந்த ஏபெல் டாஸ்மான் உட்பட பலர் இந்தப் பகுதியை ஆராய வந்தனர்.


1642-ஆம் ஆண்டு வந்த டாஸ்மான் இன்றைய டாஸ்மானியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜி தீவுகளை கண்டறிந்ததோடன்றி ஆஸ்திரேலியாவின் முழுமையான நிலவரைப்பட தயாரிப்பிற்கு பெருதும் பங்காற்றியவர். 1644-ஆம் ஆண்டு மூன்று கப்பல்களுடன் வந்த அவர் நியூ கினியின் தெற்கு கடற்கரையிலிருந்து மேற்காகச் சென்றார். நியூ கினியையும் ஆஸ்திரேலியாவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையை தவறவிட்டவர், தொடர்ந்து சென்று ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையை முழுவதுமாக கண்டறிந்ததுடன் அங்குள்ள நிலம் மற்றும் மக்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதினார்[4].


இவ்வாறான கடற்பயணங்களுக்குப் பிறகும் ஆங்கிலேயர்களின் வரவு வரை பிற ஐரோப்பியர்கள் பெரிதும் வரவில்லை. 1769-ஆம் ஆண்டு, ஜேம்ஸ் குக் டெஹீட்டியின் தெற்கு மற்றும் மேற்கேயுள்ள தெற்கு கண்டத்தை கண்டறிய தமது எச்.எம்.எஸ். என்டவர் கப்பலில் வந்தவர் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பிரதேசங்களை கண்டறிந்தார்[5]. 1770-இல் பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவினை பற்றி அறிந்து கொண்டார்கள்.


ஆஸ்திரேலியாவின் வரலாறு பிரித்தானிய குடியேற்றம் மற்றும் பழங்குடிகளை எதிர்கொண்ட முறை குறித்து சார்புள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தவிர, ஐரோப்பியர்கள் இங்கு வரும் முன்னரே சீனத்தின் புகழ்பெற்ற கடற்தளபதி செய்ங் ஹெயின் கடற்படை பதினைந்தாம் நூற்றாண்டிலேயே இங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது[6]. ஆனால் இவற்றை பல வரலாற்றியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை[7][8][9][10].

பொருளடக்கம்

பழங்குடி ஆஸ்திரேலியா [தொகு]

பிரித்தானிய குடியேற்றம் மற்றும் ஆதிக்கம் [தொகு]

குடியேற்ற தன்னாட்சி மற்றும் தங்க வேட்டை [தொகு]

இருபதாம் நூற்றாண்டு [தொகு]

முதல் உலகப் போர் [தொகு]

பெரும் பொருளியல் வீழ்ச்சி [தொகு]

இரண்டாம் உலகப் போர் [தொகு]

போருக்குப் பின்னர் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. CLIA-UNL வலைப்பதிவு
  2. José Toribio Medina, El Piloto Juan Fernandez, Santiago de Chile, 1918, reprinted by Gabriela Mistral, 1974, pp. 136, 246.
  3. Prado's account can be read online [1]
  4. *வார்ப்புரு:Dictionary of Australian Biography
    • Edward Duyker (ed.) The Discovery of Tasmania: Journal Extracts from the Expeditions of Abel Janszoon Tasman and Marc-Joseph Marion Dufresne 1642 & 1772, St David's Park Publishing/Tasmanian Government Printing Office, Hobart, 1992, pp. 106, ISBN 0-7246-2241-1.
  5. Andrew Cook, Introduction to An account of the discoveries made in the South Pacifick Ocean / by Alexander Dalrymple ; first printed in 1767, reissued with a foreword by Kevin Fewster and an essay by Andrew Cook, Potts Point (NSW), Hordern House Rare Books for the Australian National Maritime Museum, 1996, pp. 38–9.
  6. http://www.nla.gov.au/pub/gateways/issues/83/story01.html
  7. "The 1421 myth exposed". பார்த்த நாள் 2007-03-22.
  8. "Zheng He in the Americas and Other Unlikely Tales of Exploration and Discovery". பார்த்த நாள் 2007-03-22.
  9. "1421: The Year China Discovered the World by Gavin Menzies". பார்த்த நாள் 2007-03-22.
  10. Finlay, Robert (2004). "How Not to (Re)Write World History: Gavin Menzies and the Chinese Discovery of America". Journal of World History 15 (2). 

புற இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரேலிய_வரலாறு&oldid=1387565" இருந்து மீள்விக்கப்பட்டது