ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம்
Parliament of Australia
Australian coat of arms 1912 edit.png

NewParliamentHouseInCanberra.jpg

வகை இரு அவைகள்
அவைகள் பிரதிநிதிகள் அவை (கீழவை)
செனட் அவை (மேலவை)
பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் ஹரி ஜென்கின்ஸ், ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி
பெப்ரவரி 12, 2008 இலிருந்து
செனட் அவைத் தலைவர் ஜோன் ஹொக், ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி
ஆகஸ்ட் 26, 2008 இலிருந்து
உறுப்பினர்கள் 226
150 கீழவை உறுப்பினர்கள்
76 செனட் உறுப்பினர்கள்
அரசியல் குழுக்கள் கீழவை:
தொழிற்கட்சி (83)
லிபரல் (55)
தேசியம் (9)
சுயேட்சி (3)

செனட்:
தொழிற்கட்சி (32)
லிபரல் (32)
பசுமை (5)
தேசியம் (4)
நாட்டு லிபரல் (1)
குடும்பம் முதலில் (1)
சுயேட்சை (1)

கடைசி தேர்தல்கள் நவம்பர் 24, 2007
ஒன்றுகூடும் இடம் நாடாளுமன்றம், கான்பரா, ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம், ஆஸ்திரேலியா
வலைத்தளம் www.aph.gov.au

ஆத்திரேலிய நாடாளுமன்றம் (Parliament of Australia) அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் (Commonwealth parliament) என்பது ஆத்திரேலிய அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆத்திரேலிய அரசியமைப்பின் படி, ஆத்திரேலிய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: அரசி, மேலவை, மற்றும் பிரதிநிதிகள் அவை. அரசி பொதுவாக தனது பிரதிநிதியாக பொது-ஆளுநரை (Governor-General) நியமித்துள்ளார்.

கீழவை, (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஆத்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாற்றமடையும். 1984 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. இது 1993 இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1996 இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது.

மேலவை, (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது: ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் கான்பராவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் இரு வெவ்வேறு அறைகளில் கூடுகின்றன.

[தொகு] வெளி இனைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்