ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆஸ்திரேலிய பழங்குடிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.

வரலாறு[தொகு]

பழங்குடிகளின் வருகை[தொகு]

ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.

ஐரோப்பியரின் வருகை[தொகு]

1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]