ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்
| ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் | |
|---|---|
|
பிற பெயர்கள்
லினோலெனிக் அமிலம்; அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-ஆக்டாடெக்கா-9,12,15-டிரையீனோயிக் அமிலம்[1]; இண்டஸ்டிரீன் 120 |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| DrugBank | DB00132 |
| ChEBI | CHEBI:27432 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C18H30O2 |
| வாய்ப்பாட்டு எடை | 278.43 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
| உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
|---|
| இவற்றையும் காண்க |
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (α-Linolenic acid; ALA) என்னும் கரிமச் சேர்மம் பல்வேறு பொதுவான தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படுகின்றது. இதன் கட்டமைப்பைக் கொண்டு அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் என்றும்[2], உடலியக்கவியலில் ஒமேகா-3 (18:3; n−3) என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் மூன்று ஒருபக்க இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட பதினெட்டு கார்பன் தொடரி கார்பாக்சிலிக் அமிலமாகும். முதலாவது இரட்டைப்பிணைப்பானது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூன்றாவது கார்பனில் அமைந்துள்ளது. இதை ஒமேகா (ω அல்லது n) முனை என்கிறோம். எனவே, ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ஒரு பல்நிறைவுறா ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். இது பல்நிறைவுறா ஒமேகா-6 கொழுப்பு அமிலமான காமா-லினோலெனிக் அமிலத்தின் மாற்றியனாகும்.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக ரோல்லெட் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது[3],[4]. கிரீன்-ஹில்டிட்ச்சின் 1930-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் குறிக்கப்பட்டுள்ளது[5]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக 1995-ஆம் ஆண்டு செயற்கையான முறையில் தொகுக்கப்பட்டது[6].
உணவு மூலங்கள் [தொகு]
விதைகளிலிருந்துப் பெறப்படும் எண்ணெய்கள் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் வளமையான மூலங்களாகும்; உதாரணமாக, காட்டுக்கடுகு, ரேப் விதை, சோயா அவரை, அக்ரூட் பருப்பு, ஆளிவிதை எண்ணெய், சணல்விதை, பெரில்லா எண்ணெய், உருத்திர சடை(சப்ஜா) மற்றும் நார்ச்செடி. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் அகன்றஇலைத் தாவரங்களின் பச்சை இலைகளின், ஒளிச்சேர்க்கைக்குக் காரணியாக உள்ள, தைலகாய்டு சவ்வுகளிலிருந்தும் பெறப்படுகிறது[7]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் இரண்டு மணி நேரத்திற்கு வெண்ணையைப் போன்று 177 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டுள்ளதால், பல்வேறு சமையல்களில் உபயோகமாக உள்ளது [8].
இவற்றையும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Loreau, O; Maret, A; Poullain, D; Chardigny, JM; Sébédio, JL; Beaufrère, B; Noël, JP (2000). "Large-scale preparation of (9Z,12E)-1-(13)C-octadeca-9,12-dienoic acid, (9Z,12Z,15E)-1-(13)C-octadeca-9,12,15-trienoic acid and their 1-(13)C all-cis isomers". Chemistry and physics of lipids 106 (1): 65–78. doi:10.1016/S0009-3084(00)00137-7. பப்மெட் 10878236.
- ↑ Beare-Rogers (2001). "IUPAC Lexicon of Lipid Nutrition" (pdf). பார்த்த நாள் 4 February 2012.
- ↑ Rollett, A. (1909). "Zur kenntnis der linolensäure und des leinöls". Z. Physiol. Chem. 62 (5–6): 422. doi:10.1515/bchm2.1909.62.5-6.422.
- ↑ J. W. McCutcheon (1955), "Linolenic acid", Org. Synth.; Coll. Vol. 3: 351
- ↑ Green, TG; Hilditch, TP (1935). "The identification of linoleic and linolenic acids". Biochem. J. 29 (7): 1552–63. பப்மெட் 16745822.
- ↑ Sandri, J.; Viala, J. (1995). "Direct preparation of (Z,Z)-1,4-dienic units with a new C6 homologating agent: synthesis of alpha-linolenic acid". Synthesis 3 (3): 271–275. doi:10.1055/s-1995-3906.
- ↑ Chapman, David J.; De-Felice, John and Barber, James (May 1983). "Growth temperature effects on thylakoid membrane lipid and protein content of pea chloroplasts 1". Plant Physiol 72 (1): 225–228. doi:10.1104/pp.72.1.225. பப்மெட் 16662966.
- ↑ http://www.aaoobfoods.com/graininfo.htm