ஆலுக் குறும்பா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆலுக் குறும்பா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியின் கிழக்குப் பகுதிகள். | |
| பேசுபவர்கள்: | 2,500 (1997) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு ஆலுக் குறும்பா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | xua | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஆலுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2,500பேர்களால் பேசப்படுகிறது. இது, பால் குறும்பா, ஹால் குறும்பா, போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஆலுக் குறும்பா, பால் குறும்பா ஆகியன ஏறத்தாழ 80% சொல்லொற்றுமை கொண்ட கிளைமொழிகளாகும். இம்மொழி, இம்மொழி பேசுவோரிடையே அதிகமாகப் பய்ன்படுத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழ் அல்லது கன்னடம் போன்ற மொழிகளையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். சொந்த மொழியில் கல்வியறிவு வீதம் 1% இலும் குறைவே. இரண்டாம் மொழியில் 15 - 25% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.