ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் (RSS Pracharak) என்பது ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) முழுநேர ஊழியரைக் குறிக்கும். இச்சங்கத்தின் கூட்டங்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தல், பொதுக் கூட்டங்களில் விரிவுரை ஆற்றுவது, இந்து தேசியம், இந்துத்துவா போன்ற தத்துவங்களை இந்துக்களிடையே பரப்புதல், சங்கப் பரிவார் அமைப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல் போன்றவையே ஒரு பிரச்சாரகரின் முக்கியப் பணிகள் ஆகும்.

துவக்கக் காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, நரேந்திர மோதி, இல. கணேசன் போன்றவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகர்களாக இருந்தவர்களே.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்_எஸ்_எஸ்_பிரச்சாரகர்&oldid=3796996" இலிருந்து மீள்விக்கப்பட்டது