ஆர்.என். ஏ முதிர்வாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூலக்கூற்று உயிரியலில் ரிபோ கரு அமிலம் முதிர்வாக்கம் (RNA processing or Splicing) என்பது ரிபோ கரு அமிலம் (ஆர்.என்.ஏ) நகலாக்கத்தில் மரபணு (exons) வெளிப்படுவதற்கு முன் மரபணு அற்ற பகுதிகள் (introns) நீக்கப்படுகின்ற நிகழ்வு ஆகும்.

Simple illustration of exons and introns in pre-mRNA and the formation of mature mRNA by splicing. The UTRs are non-coding parts of exons at the ends of the mRNA.

பொதுவாக மரபு ஈரிழையில் (டி.என்.ஏ) இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் "முந்திய ஆர்.என்.ஏ" (precursor RNA அல்லது non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இவைகளில் மரபணு மற்றும் மரபணு அற்ற (coding அல்லது non-coding, exons அல்லது introns) பகுதிகள் நிறைந்து காணப்படும். முதலில் மரபணு அற்ற பகுதிகளினால் ஒரு நன்மையும் இல்லை என நம்பப்பட்டது, அண்மையில் குறு ஆர்.என்.ஏ (micro RNA) அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால் அவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இருந்தாலும் ஒரு மரபணு வெளிபடுவதற்கு முன் மரபணு அற்ற பகுதிகள் நீக்கப்படுகின்ற நிகழ்வு "ரிபோ கரு அமிலம் முதிர்வாக்கம்" (RNA splicing) எனப்படும்.

ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் பல வழிகளில் நடைபெறுகின்றன. இதற்கு சிறிய கரு ரிபோ கரு புரதம் (small nuclear robonuclear proteins) மிகையாக ஈடுபடுகிறது. இவைகள் ஆர்.என்.ஏ.யில் சில பிரிவு புள்ளிகளில் (branch point, பொதுவாக இவைகள் அடிநின் மிகுந்த பகுதிகளாக இருக்க கூடும்) ஒட்டி அல்லது இணைந்து, மரபணு அற்ற பகுதிகளை வெட்டி வெளித் தள்ளுகின்றன.

தன்முதிர்வாக்கம் (self-splicing) [தொகு]

தன்முதிர்வாக்கத்தின் போது, எந்த வித புரதமும் இல்லமால் ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆர்.என்.ஏ.யும் ஒரு நொதியாக செயல்பட முடியும் என நிருபிக்கப்பட்டது மற்றும் படிவளர்ச்சி (evolution) கொள்கையில் ஆர்.என்.ஏ. தான் முதலில் வந்திருக்கக்கூடும் என்ற கருத்தாக்கத்தை உண்டாக்கியது. ஏனெனில் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. போல் இல்லாமல் ஒரு நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளது. ஆர்.என்.ஏ. ஒரு மரபு இழையாகவும் (சில வைரசுக்களில்), ஒரு நொதியாகவும், வேதிப் பொருள்களில் அழியும் (NaOH) நிலையாக இருப்பதால் இவைகள் முதலில் தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தை சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.