நல்லங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர்மடில்லோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!
நல்லங்கு (ஆர்மடில்லோ)
புதைப்படிவ காலம்: 65.5-55.8 Ma
6.55~5.58 கோடி ஆண்டுகள்
நடக்கும் அழுங்கு
நடக்கும் அழுங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு பாலூட்டிகள்
உள்வகுப்பு: நல்விலங்குகள்[1]
பெருவரிசை: நல்மூட்டுடையவை[2]
வரிசை: கவச உடலிகள்[3]
இல்லிகெர்[note 1], 1811
குடும்பங்கள்
  • Pampatheriidae (தொல்விலங்கு)
  • Glyptodontidae] (தொல்விலங்கு)
  • Dasypodidae- இன்றுள்ளவை.

நல்லங்கு (ஆங்கிலம்: Armadillo) என்பது ஓர் உயிரினமாகும். ஆர்மடில்லோ என்ற எசுப்பானியச் சொல்லுக்கு, கவசம் உடைய சிற்றுயிரி என்பது பொருளாகும். இந்த உயிரினத்தின் உடல் அமைப்பைக் கொண்டு, இதனைக் கவச உடலிகள் பிரிவில் சேர்த்துள்ளனர். கவச உடல் அமைப்புடைய விலங்குகளுக்கு, தமிழில் அழுங்கு[4] என்று பெயர். நல்லங்கை ஆங்கிலத்தில் ஆர்மடில்லோ என்பர்.[5]

பொருளடக்கம்

[தொகு] வகைப்பாடு

ஒன்பது (Nine-banded) பட்டைகளைக் கொண்ட நல்லங்கு. (Dasypus novemcinctus)
Silver armadillo --- வெள்ளியில் செய்யப்பட்ட நல்லங்கு.
Armadillo playing in the grass --- புல் தரையில் விளையாடும் நல்லங்கு.
அமெரிக்கக் கண்டம்


வகைப்பாட்டியலின்படி நல்லங்குகளில் இன்று ஒரே ஒரு குடும்பமே[note 2] உயிருடன் உள்ளது. அக்குடும்பத்தில் 10 பேரினங்களும், 20 சிற்றினங்களும் உள்ளன.

தொல்லுயிரியல் ஆய்வில், மேலும் இரண்டு[note 3] குடும்பங்கள் இருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்புதைப்படிவங்களைக் கொண்டு சில கோடி ஆண்டுகளுக்கு[note 4] முன்பிருந்த சூழ்நிலைகளை இன்றைய சூழலோடு ஒப்பிட்டு ஆராய முடிகிறது.

[தொகு] வாழிடம்

இவற்றின் தாயகம் அமெரிக்கக் கண்டம் ஆகும். அங்கு இவ்வுயிரினங்கள் பல்வேறு வாழிடங்களில் வாழ்கின்றன. இக்கண்டத்தின், பல நாடுகளில் பலவிதமான நல்லங்குகள் விரவி வாழ்கின்றன.

அமெரிக்க நாட்டில், 9 கவசப்பட்டைகளை உடைய நல்லங்குகள் அதிகமாக டெக்சஸ் மாநிலத்தில் இருக்கின்றன. இவைகளை வேட்டையாடி உண்ணும், ஊனுண்ணிகள் இல்லாததால் இவைகள் தங்கள் வாழிடங்களை விரிவுபடுத்திவருகின்றன. குறிப்பாக தென் கரொலைனா, புளோரிடா, நெப்ராஸ்கா, இந்தியானா, ஒன்டாரியோ ஆகிய மாநிலங்களில் இவ்வுயிரினங்கள் தங்களது வாழ்விடங்களைப் பெருக்கி வருகின்றன.

[தொகு] வளரியல்பு

Dasypus skeleton --- எலும்புக் கூடு.
Three Banded Armadillo --- மூன்று பட்டையுள்ள நல்லங்குஆர்மடில்லோ


உடலமைப்பு: இவ்விலங்குகளில் மூன்று வகைகள் உள்ளன.

  1. குட்டை நல்லங்கு [note 5] - - 12 முதல் 15 செ.மீ. நீளமுடையது.
  2. நடுத்தர நல்லங்கு [note 6] - 75 செ.மீ. நீளமுடையது.
  3. மாபெரும் நல்லங்கு - 150 செ.மீ. நீளமுடையது. எடை= 59கிலோ[6]

[தொகு] நல்லங்குகளும் மாந்தரும்

மனிதர்களையும், சிலவகைக் குரங்குகளையும், முயல்களையும், எலிகளையும் தவிர வெகுசில விலங்குகளுக்கே தொழு நோய் வருகிறது. அதிலும் இவற்றின் உடல்வெப்பம் குறைவு என்பதால் தொழு நோயை உண்டாக்கும் மைக்கோபேக்டீரியம் இலெப்பிரே கிருமிகள் இவற்றின் உடலில் நன்கு வளர்கின்றன. இவற்றின் உடல் வெப்பமான 93°F மனித உடல் வெப்பத்தை ஒத்தது. அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. அமெரிக்காவின் டெக்சாசு, இலூசியானா மாநிலங்களில் இவை தொழுநோய்க் காவிகளாகவும் (கடத்திகளாகவும்) தேக்கிகளாகவும் அறியப்பட்டுள்ளன.[7] அமெரிக்கக் கண்டத்தில் தொழு நோய் முன்பு இல்லை என்பதால் முதன் முதலாக வெளியில் இருந்து புலம்பெயர்ந்த ஐரோப்பிய மக்களிடம் இருந்து தொழு நோய் இவ்விலங்குகளுக்குத் தொற்றியிருக்கக் கூடும்.[7][8] இவை சாகாசு நோயின் தேக்கிகளாகவும் உள்ளன.[9]

ஒன்பது பட்டை நல்லங்குகளின் இனப்பெருக்கத்தில் ஒவ்வொரு ஈனுகையின் போதும் ஒரே மரபணு வார்ப்பிலான நான்கு குட்டிகளை ஈனுகின்றன.[10][11][12] ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரே கருவணு பிரிந்து நான்கு முளையங்களாக வருவதால் இவற்றின் குட்டிகளை மருத்துவ ஆய்வுகளுக்கும் நடத்தை ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பாலூட்டிகளில் ஒரே கருவணுவிலிருந்து பல முளையங்களை இயல்பான கருக்கட்டலிலேயே தவறாமல் பெறுவது நல்லங்குகளில் மட்டுமே முடியும். அதுவும் இயல்பில் தாசிப்பசு பேரினத்தில் மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது. இவ்விலங்குகளைத் தவிர இப்பண்பு சில குளவிகள், தட்டைப்புழுக்கள், பல நீர்வாழ் முதுகெலும்பிலிகள் போன்ற பாலூட்டியல்லாத விலங்குகளில் மட்டுமே காணப்படுகிறது.[11]

நல்லங்கு முதுகு ஓட்டைக் கொண்டு செய்த சரங்கோ இசைக்கருவி

அச்சத்தில் எம்பிக் குதிக்கும் பண்பினால் இவை சாலைகளில் அடிக்கடி வண்டிகளில் அடிபட்டு இறக்கின்றன.

ஆண்டீய மலைப் பழங்குடியினர் இவற்றின் புறமுதுகில் உள்ள ஓட்டுக்கூட்டைப் பயன்படுத்திச் சரங்கோ எனும் இசைக்கருவியைச் செய்கின்றனர்.

[தொகு] ஊடகக் காட்சியகம்

[தொகு] குறிப்புகள்

  1. Johann Karl Wilhelm Illiger - இல்லிகெர்
  2. Dasypodidae
  3. Pampatheriidae, 2.Glyptodontidae
  4. Miocene
  5. குட்டை நல்லங்கு - Chlamyphorus truncatus
  6. நடுத்தர நல்லங்கு - Dasypus பேரினம்

[தொகு] மேற்கோள்கள்

  1. En.wiktionary, Eutheria - நல்விலங்குகள்
  2. En.wikipedia, Xenarthra - நல்மூட்டுடையவை
  3. En.wiktionary, cingulum - கவச உடலிகள்
  4. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். pp. 165. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:4571.tamillex. 
  5. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். pp. 2170. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:1927.tamillex. 
  6. மாபெரும் நல்லங்கு - Priodontes maximus
  7. 7.0 7.1 Truman, Richard W. (April 2011). "Probable Zoonotic Leprosy in the Southern United States". The New England Journal of Medicine (Massachusetts Medical Society) 364: 1626–1633. doi:10.1056/NEJMoa1010536. PMID 21524213. PMC 3138484. http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa1010536. Retrieved 3 May 2011. 
  8. Gardiner Harris (27 April 2011). "Armadillos Can Transmit Leprosy to Humans, Federal Studies Confirm". The New York Times. http://www.nytimes.com/2011/04/28/health/28leprosy.html. Retrieved 3 May 2011. 
  9. Yaeger RG. 1988. The prevalence of Trypanosoma cruzi infection in armadillos collected at a site near New Orleans, Louisiana. Am J Trop Med Hyg. 38(2):323-6.
  10. "The Nine-banded Armadillo (Dasypus novemcinctus)". Edis.ifas.ufl.edu. பார்த்த நாள் 2009-12-17.
  11. 11.0 11.1 Loughry, W.J; Prodohl, Paulo A; McDonough, Colleen M; & Avise, John C (May–June 1998), "Polyembryony in Armadillos", American Scientist 86: 274–279, http://www.valdosta.edu/~jloughry/Reprints/AmSci.pdf 
  12. Hamlett, G.W.D (September 1933), "Polyembryony in the Armadillo: Genetic or Physiological?", The Quarterly Review of Biology 8 (3): 348–358, http://links.jstor.org/sici?sici=0033-5770(193309)8%3A3%3C348%3APITAGO%3E2.0.CO%3B2-Q 
"http://ta.wikipedia.org/w/index.php?title=நல்லங்கு&oldid=1059623" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்