ஆர்க்டிக் முயல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆர்க்டிக் முயல்[1] | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Lepus arcticus Ross, 1819 |
||||||||||||||
| ஆர்க்டிக் முயலின் பரவல் | ||||||||||||||
ஆர்க்டிக் முயல் (Lepus arcticus) அல்லது துருவ முயல் என்பது துருவப்பகுதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்ட ஒரு முயல் இனம். இது ஆர்க்டிக் பனிப்பகுதியில் வாழ்வதற்கேற்ப அடர்ந்த மயிர்க்கற்றைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை கதகதப்பாக இருக்க தரைப்பகுதியில் பனிக்கு அடியில் துளைகள் அமைத்து வாழ்கின்றன. இவை நீளமான காதுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றால் மணிக்கு 40 மைல் தொலைவு வரை ஓட இயலும். ஆர்க்டிக் ஓநாய்களே இவற்றின் முதன்மையான இரைகொல்லியாகும்.
இம்முயல்கள் கனடா, அலாஸ்காவின் வடகோடிப்பகுதிகள், கிரீன்லாந்தின் துந்த்ராப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆர்க்டிக் முயல் 22 முதல் 28 அங்குல நீளமும் 4 முதல் 5.5 கிலோ எடையும் இருக்கும். தாவரங்களும் இலைகள், புற்களுமே இவற்றின் உணவு.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:MSW3 Hoffmann
- ↑ Lagomorph Specialist Group (1996). Lepus arcticus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-05-06. Database entry includes a brief justification of why this species is of least concern