ஆர்க்கிகாட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர்க்கிகாட் (ArchiCAD) என்பது ஒரு கட்டிடக்கலை சார்பான கட்டிடத் தகவல் மாதிரியாக்கக் கணினி உதவு வடிவமைப்பு மென்பொருள் ஆகும். மக்கின்டோசு, வின்டோசு ஆகிய இயங்கு தளங்களில் செயல்படக்கூடிய இது அங்கேரி நாட்டைச் சேர்ந்த கிராபிசாஃப்ட் என்னும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
தொடக்க ஆப்பிள் மக்கின்டோசில் இயங்குவதற்காக இதனை உருவாக்கும் வேலைகள் 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தனியாள் கணினிகளில் முப்பரிமாண வரைபடங்களை வரையப் பயன்படுத்தக்கூடிய முதல் கணினி உதவு வடிவமைப்பு மென்பொருள் "ஆர்க்கிக்காட்"டே எனக் கருதப்படுகிறது. இன்று இம் மொன்பொருளை 100,000 க்கும் மேற்பட்ட கட்டிடக்கலைஞர்கள் தமது கட்டிட வடிவமைப்பு வேலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
|
|
|
|---|---|
| கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் தொடர்பான மென்பொருள்கள் |
கிராபிசாஃப்டின் ஆர்க்கிகாட் | பென்ட்லி Architecture | புரொசெக்ட் புளூபிரிண்டின் கோட்புக் | டேட்டா டிசைன் சிசுட்டம் | டெக்லா அமைப்புக்கள் | கிராபிசாஃப்டின் கான்சுட்ரக்டர் | நெவிசுவேர்க்சு செட்சுட்ரீம் | ஆட்டோடெசுக் ரெவிட் | நெமெட்செக் என்.ஏ. வெக்டர்வேர்க்சு ஆர்க்கிடெட்க்ட் | கிரைட்டெக் அட்வான்சு | ஐடியா ஆர்க்கிடெக்சரல் |
| கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் தொடர்பான தலைப்புக்கள் |
Industry Foundation Classes |