ஆயிரவாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டு (Millennium) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும். நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.
[தொகு] குழப்பங்கள்
தவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரவாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரவாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.
[தொகு] முடிவு
கிரிகோரியன் நாட்காட்டி அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரவாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரவாண்டு என்று முடிவு காணப்பட்டது.