காயின் மற்றும் ஆபேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆபேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காயின் தனது சகோதரன் ஆபேலை கொலை செய்யும் காட்சி - சர் பீட்டர் பவுல் ரூபென்ஸ் வரைந்த ஓவியம்

காயின் மற்றும் ஆபேல் (எபிரேயம்: הֶבֶל ,קַיִן Qayin, Hevel)என்பவர்கள் ஆதியாகமத்தின் படி ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளைகள் ஆவார்கள்..[1][2] ஆதாமும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது. தேவனின் கட்டளையை மீறி ஞானபழத்தினை உண்ட காரணத்தினால் மனிதனாகப்பட்டவன். கடவுளினால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தனது அன்றாட உணவிற்காக கடுமையாக உழைக்கும்படி கடவுளால் பணிக்கப்பட்டான். அதன் பின் ஆதியாகமத்தின் படிக்கு காயின் ஒரு விவசாயியாகவும் ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும் சித்தரிக்கப்படுகிறார். இந்த நூலின் படி தனது சகோதரனான ஆபேலை காயின் கொலை செய்தார். இதனால் மண்ணின் முதல் கொலையாளி காயின் ஆவார். முதன்முதலில் கொலையுண்ட மனிதன் ஆபேல் ஆவான். ஆதியாகமத்தில் இந்த கொலைக்கான காரணமாக எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் காயின் தனது சகோதரனின் பால் கொண்ட பொறாமையே இந்த கொலைக்கான காரணம் என்று விமர்ச்சகர்கள் கருதுகிறனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காயின் சாத்தானின் வாரிசாக போனமையால் அவனுள் உறைந்த சாத்தானின் தன்மையே தனது சகோதரனை கொலை செய்யும்படி செய்தது என விளக்கங்கள் கூறப்பட்டு வருகிறன. மேடிவல் ஆர்ட் (Madival Art) எனப்படும் பழங்கால சித்தரிப்பு முறைகளின் வழியாக ஷேக்ஸ்பியர் காலந்த்தொட்டு இன்றுவரை இவ்வாறே இந்த காரணம் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. இசுலாமியர்களின் புனித நூலான குர்-ஆன்'லும் ஆதாமின் மக்களாக (Arabic: ابني آدم) காயின் மற்றும் ஆபேல் இருவரின் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்-ஆன்'இல் இவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

பெயர்க்காரணம்[தொகு]

காயின் மற்றும் ஆபேல் என்பது எபிரேய மொழியில் இருந்து கொணரப்பட்ட Qayin-(קין) மற்றும் Havel-(הבל) ஆகும். இவர்களில் ஆபேல் என்பது பெயர் சொல்லிலக்கணத்தின்படிக்கு இபில்(ibil) எனப்படும் மந்தையாளர் அல்லது பண்ணையாளர் என பொருள்படுமான நவீன அராபிய மொழியின் இணைச்சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் இந்த சொல்லானது ஒட்டக மந்தையை மட்டுமே குறிக்கப்பயன்படுகிறது. காயின் என்பது குய்ன்(Qun) எனப்படும் உலோகம் கையாள்பவர் என்கிற பொருள்படுபடியுமான சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரவர்களின் பெயர்களே அவர்கள் செய்கிற தொழிலை குறிக்கும்படியாக அமையுமாறு அழைக்கப்பட்டது. இதில் ஆபேல் கால்நடை மேய்ப்பனாகவும் காயின் விவசாயியாகவும் இருந்தமையால் இந்த பெயர்கள் வழங்கப்பட்டது. இதன் படியே ஆதாம் (man) மற்றும் ஏவாளின் ("life", Chavah in Hebrew) பெயர்களும் வழங்கப்பட்டிருக்கலாம்.

கொலைக்கான காரணம்[தொகு]

ஜேம்ஸ் டிஸ்ஸாட் என்பவர் வரைந்த காயின் ஆபேலை கொலை செய்ய அழைத்து செல்லும் காட்சி

ஆதியாகமத்தில் ஆபேலின் கொலைக்காரணமாக எதையும் உறுதியிட்டு கூறவில்லை. நவீன கால விமர்ச்சகர்கள் தங்களுக்குள்ளாகவே சில காரணங்களை அலசி வகுத்துக்கொண்டனர். பொதுவாக கடவுள் காயினின் படையலை ஏற்றுகொள்ளாமல் ஆபேலின் மீது அதிகப்படியான அன்பு பாராட்டியதால் உருவான பொறாமையின் காரணமாக கொன்றிருக்கலாம் என்கிற காரணம் தவிர மிட்ராஷ்(Midrash) போன்ற பழங்கால ஏடுகளின்படிக்கு மேலும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதில் காயின் மற்றும் ஆபேலின் உடன்பிறந்த சகோதரியான அக்லிமாவை கரம்பற்றுவதில் வந்த சண்டையினால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. காயின் தனது சகோதரியிடம் தகாத உறவுகொண்டிருந்தான் என்கிற கோணத்தில் ஆய்வாளர்களின் கருத்து இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயின்_மற்றும்_ஆபேல்&oldid=3316398" இலிருந்து மீள்விக்கப்பட்டது