ஆபிரிக்க வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எகிப்தின் லக்சோரில் உள்ள தூண். கிபி 1200

ஆபிரிக்க வரலாறு இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு நாட்டின அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.

பொருளடக்கம்

தொன்ம காலம் [தொகு]

ஆபிரிக்காவின் எழுதப்பட்ட வரலாறு கிமு 4 ஆம் ஆயிரவாண்டில் எகிப்திய நாகரிகத்தின் எழுச்சியுடன் தொடங்குகிறது. பின் வந்த நூற்றாண்டுகளில் நைல் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் வளர்ச்சியடைந்தன. மிகப் பழைய காலத்திலேயே இந் நாகரிக மக்கள் ஆபிரிக்க நாகரிகம் அல்லாத நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுள், கார்த்தேஜில் வணிகப் பேரரசை நிறுவியிருந்த போனீசியர்கள் தொடக்கம், கிமு முதலாம் நூற்றாண்டில் வட ஆபிரிக்கா முழுவதிலும் குடியேற்றங்களை அமைத்திருந்த ரோமர்கள் வரை அடங்குவர். இக் காலத்தில் கிறிஸ்தவம் வட ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியது.

கிபி 7 - கிபி 16 [தொகு]

Civilizations before European colonization.
European claims in Africa, 1914

கிபி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்கு ஆபிரிக்காவும், கிழக்கு ஆபிரிக்காவும் இஸ்லாம் மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது. இது நாளடைவில் சுவாஹிலி மக்களுடையதைப் போன்ற புதிய பண்பாடுகள் உருவாவதற்கும், சோங்காய் பேரரசு போன்ற அரசுகள் உருவாவதற்கும் வழி வகுத்தது. மேலும் தெற்கே கானா, ஓயோ, பெனின் பேரரசு போன்றவை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்களினது செல்வாக்கினாலும் பாதிக்கப்படாமல் வளர்ச்சியடைந்தன.

அடிமைப்படல், குடியேற்றவாதம் [தொகு]

இஸ்லாத்தின் எழுச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் அரபு அடிமை வணிகம் உச்சநிலையை அடைந்தது. இதன் மூலம் பல ஆபிரிக்க மக்கள் புதிய உலகுக்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டனர். அத்துடன் ஆபிரிக்காவுக்கான போராட்டமும் தொடங்கியது. ஆபிரிக்காவின் குடியேற்றவாதக் காலம் 1800 களில் தொடங்கியது.

20 ம் நூற்றாண்டு [தொகு]

ஆபிரிக்க விடுதலை இயக்க நடவடிக்கைகளால், 1951 ஆம் ஆண்டில் லிபியா விடுதலை பெற்ற முதலாவது முன்னாள் ஆபிரிக்கக் குடியேற்ற நாடு ஆகியது.

குடியேற்றவாதம் பின்பு [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

உசாத்துணைகள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரிக்க_வரலாறு&oldid=1351145" இருந்து மீள்விக்கப்பட்டது