ஆட்டனத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆட்டன் அத்தி என்பவன் சங்ககாலத்து நீச்சல் நடன வீரன். இவரைப் பற்றி சங்கப்பாடல்களில் [1] குறிப்புகள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  • அரசன் கரிகாலன் முன்னிலையில் கழார் என்னும் காவிரியாற்றுத் துறையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்டினான்.
  • கரிகாலன் மகள் ஆதிமந்தி இவனைக் காதலித்தாள்.
  • இவனது அழகில் மயங்கிய காவிரி என்னும் பெண் இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடியபோது தன் கூந்தலில் மறைத்து ஆற்றோடு இட்டுச் சென்றாள்.
  • காவிரியை வெள்ளம் அடித்துச் சென்றபோது, கரை ஒதுங்கிய ஆட்டனத்தியை மருதி காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள்.
  • காதலனைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியை ஒப்படைத்துவிட்டு மருதி கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்.
  • நீச்சல் நடனம் (Synchronized Swimming) : கழார்த்துறையில் ஆட்டனத்தி புனலாடினான். அப்போது அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பல சாகசங்களைச் செய்து காட்டினான். அவற்றை அரசன் கரிகாலன் கண்டு களித்தான். ஆட்டனத்திக்கும், காவிரி என்பவளுக்கும் இடையில் நடந்த நீச்சல்நடனப் போட்டிக்கு நடுவராகவும் விளங்கினான்.

பாடல்கள் தரும் செய்திகள்[தொகு]

இன்னிசை முழங்கிற்று. ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டிக் காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டிக் காட்டினான். [2]

கழார் முன்துறை ‘பரதவர் கோமான் பல்வேல் மத்தி’க்கு உரியது. [3]

கழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் சேர்ந்து நீராடினர். ஆட்டனத்தியின் அழகினை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். அப்போது காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டனத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள்.

(ஆதிமந்தி என்பவள் அரசன் கரிகாலன் மகள்.) அவள் ஆட்டனத்தியைக் காதலித்தாள். காதலன் ஆட்டனத்தியைக் காவிரியாறு கொண்டுசெல்லவில்லை என உறுதியாக நம்பினாள். ஊர் ஊராகத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்றாள். உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான்மட்டும் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அகநானூறு 222, 226, 376
  2. பரணர் – அகம் 376
  3. பரணர் – அகம் 226
  4. பரணர் – அகம் 222, 376,

இவற்றையும் காண்க[தொகு]

ஆதிமந்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டனத்தி&oldid=1616274" இலிருந்து மீள்விக்கப்பட்டது