ஆட்சித் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
வட்டார வழக்குகள்
பிராமணத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கரிசல் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
தமிங்கிலம்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மதுரைத் தமிழ்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
ஜுனூன் தமிழ்

தொகு

அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித் தமிழ் எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக இலக்கியத் தமிழ் உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. அறிவியல் தமிழ் தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.

பொருளடக்கம்

தமிழ்நாடு [தொகு]

"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.[1] ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.[2]அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன."[3]

ஆட்சி மொழிப் பயிலரங்கம் [தொகு]

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு துறை அரசுப் பணியாளர்களுக்கு அரசுப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கும், தமிழில் கோப்புகளை எழுதுவதற்கும் பயிற்சியளிக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் எனும் தலைப்பில் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இப்பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 9.30 இலட்சம் செலவிடுகிறது.இவை தவிர ஆட்சிமொழிக் கருத்தரங்கத்திற்கும் 6.40 இலட்சம் ரூபாய் செலவு செய்கிறது.

இலங்கை [தொகு]

சிங்கப்பூர் [தொகு]

மலேசியா [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "The Tamil Nadu Official Language Act, 1956 - Act 39 of 1956". தமிழக அரசிதழ். பார்த்த நாள் ஏப்ரல் 18, 2013.
  2. "தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம்". தமிழ்நாடு அரசு வலைத்தளம். பார்த்த நாள் ஏப்ரல் 18, 2013.
  3. தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சித்_தமிழ்&oldid=1404565" இருந்து மீள்விக்கப்பட்டது