ஆடம்பரப் பண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும்.

உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்பரப்_பண்டம்&oldid=1671496" இலிருந்து மீள்விக்கப்பட்டது