ஆசீஷ் நேரா
| ஆசீஷ் நேரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஆசீஷ் நேரா | |||
| பிறப்பு | 29 ஏப்ரல் 1979 | |||
| தில்லி, இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 17) | 24 பிப்ரவரி 1999: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | 13 ஏப்ரல் 2004: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 117) | 21 சூன் 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 21 சனவரி 2011: எ தென்னாபிரிக்கா | |||
| சட்டை இல. | 64 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1997–நடப்பில் | தில்லி | |||
| 2008 | மும்பை இந்தியன்ஸ் | |||
| 2009–2010 | தில்லி டேர்டெவில்ஸ் | |||
| 2011-நடப்பில் | சகாரா புனே வாரியர்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வுகள் | ஒ. ப.து கள் | மு.து | ப. அ | |
| ஆட்டங்கள் | 17 | 117 | 78 | 174 |
| ஓட்டங்கள் | 77 | 140 | 515 | 341 |
| துடுப்பாட்ட சராசரி | 5.50 | 6.08 | 8.30 | 8.31 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 19 | 24 | 43 | 24 |
| பந்து வீச்சுகள் | 3447 | 5609 | 14829 | 8406 |
| இலக்குகள் | 44 | 154 | 257 | 217 |
| பந்துவீச்சு சராசரி | 42.40 | 31.56 | 29.87 | 32.13 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 2 | 12 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 4 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/72 | 6/23 | 7/14 | 6/23 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 17/– | 24/– | 25/– |
|
22 சனவரி, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo |
||||
ஆசீஷ் நேரா (Ashish Nehra, பிறப்பு: ஏப்ரல் 29, 1979, தில்லி) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இடதுகை விரைவுப் பந்து வீச்சாளராகிய நேரா 1999ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் முதலில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[1] தமது முதல் தரத் துடுப்பாட்டத்தைச் சொந்த ஊரான தில்லிக்காக 1997/98 பருவம் முதல் ஆடி வருகிறார்.[1] முதன்முறையாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999ஆம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.[1] முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சிம்பாப்வேயுடன் 2001ஆம் ஆண்டு அராரேயில் துவங்கினார்.[1] தமது முதல் தேர்வுப் போட்டியில் சில பந்துகளிலேயே மாவன் அத்தப்பத்தை வீழ்த்தினார்.[2] அதேபோல ஒருநாள் துடுப்பாட்டத்தின் முதல் ஆட்டத்திலும் இரண்டாவது பந்திலேயே அலிஸ்டர் கேம்பெல்லை வீழ்த்தினார்.[3] தென்னாபிரிக்காவில் நடந்த 2003 உலகக்கிண்ணத்தில் விளையாடி இங்கிலாந்திற்கு எதிராக 23 ஓட்டங்களுக்கு இலக்குகளை வீழ்த்தினார்.[4] பிற உலகக்கிண்ண ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்து வீசினார்.
இருப்பினும் இவரது தொடர்ச்சியில்லாத ஆட்டத்திறனாலும் உடற்காயங்களாலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பெற இயலவில்லை. மேலும் இவரது களத்தடுப்புத் திறன் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ஆசீஷ் நேரா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
- ↑ "இலங்கை எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
- ↑ "சிம்பாவே எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
- ↑ "இங்கிலாந்து எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
வெளியிணைப்புகள் [தொகு]
| 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| கவுதம் கம்பீர் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சுரேஷ் ரைனா | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | விராட் கோலி | நேரா | ஸ்ரீசாந்த் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | பியூஷ் சாவ்லா | அசுவின் | பயிற்றுனர் கிர்ஸ்டன் | ||