ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்
|
ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்
(Asian Clearing Union) |
||
|---|---|---|
| தலைமையிடம் | தெஹ்ரான், ஈரான் | |
| Type | கணக்குத் தீர்வக ஒன்றியம் | |
| பொருளாதார உறுப்பினர்கள் | ஒன்பது | |
| தலைவர்(கள்) | ||
| - | ஏசீயூ அவைத்தலைவர் | |
| நிறுவல் | 1974 ஆம் ஆண்டு | |
| Website www.asianclearingunion.org |
||
ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (ACU) என்பது பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் (ESCAP) முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் அமைக்கப்பட்ட ஆசிய ஒன்றியம் ஆகும்.[1] சாதாரணமாக அந்நியச் செலாவணி பரிமாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேமுறையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் வகை ஒன்றின் அனைத்து பரிமாற்றங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தினால் கையாளப்படுகின்றன.[2]
பொருளடக்கம் |
நோக்கம் [தொகு]
- பங்குபெறும் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவித்தல்
- அந்நியச் செலாவணி இருப்புகளையும் மாற்றுக்கட்டணங்களையும் சிக்கனமாக பயன்படுத்தல்
- பரஸ்பர அடிப்படையில் பரிவர்த்தனைகளை ஏற்படுத்த ஒரு தீர்வு காணுதல்
ஆகியன இவ்வொன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உறுப்பினர்கள் [தொகு]
ஈரான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும், பணம் சார் ஆணையுரிமங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
| நாடு | மத்திய வங்கி | ஆண்டு |
|---|---|---|
| வங்களாதேச வங்கி | 1974 | |
| ராயல் மானிட்டரி அதாரிட்டி ஆஃப் பூடான்(Royal Monetary Authority of Bhutan)] | 1999 | |
| இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) | 1974 | |
| ஈரான் இஸ்லாமியக் குடியரசு மத்திய வங்கி (Central Bank of the Islamic Republic of Iran) | 1974 | |
| மாலத்தீவுகள் நாணயஞ் சார்ந்த ஆணையம் (Maldives Monetary Authority) | 2009 | |
| மியான்மர் மத்திய வங்கி (Central Bank of Myanmar) | 1977 | |
| நேபாள ராஷ்டிரீய வங்கி (Nepal Rastra Bank) | 1974 | |
| பாக்கிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) | 1974 | |
| இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) | 1974 |
தீர்வுக்குரிய அடிப்படை பண அலகு [தொகு]
ஆசிய பண அலகு என்பது ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் கணக்குக்குரிய பொது அலகாகும். அது ஏசீயூ டாலர் மற்றும் ஏசீயூ யூரோ என்ற மதிப்பிலக்கங்களில் ஒரு அமெரிக்க டாலருக்கும், ஒரு யூரோவுக்கும் முறையே ஈடானதாகும்.[3] பணம் செலுத்தும் அனைத்துச் செயல்முறைகளிலும், ஆசிய பண அலகே இலக்க மதிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய செயல் முறைகளின் தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், ஏசீயூ டாலர் (ACU dollar) கணக்குகளின் வழிச் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படலாம்.
மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]
- ↑ "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". asianclearingunion. பார்த்த நாள் சனவரி 01, 2013.
- ↑ "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". இந்திய ரிசர்வு வங்கி. பார்த்த நாள் சனவரி 01, 2013.
- ↑ "Definition of 'Asian Currency Unit - ACU'". investopedia. பார்த்த நாள் சனவரி 01, 2013.