ஆசியக் கிண்ணம் 1997

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1997 ஆசியக் கிண்ணம்
Acup.png
நிர்வாகி(கள்) ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வகை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித்தொடர் வகை ரொபின் சுற்று, Knockout
நடத்துனர்(கள்) இலங்கையின் கொடி இலங்கை
வெற்றியாளர் Flag of Sri Lanka.svg இலங்கை (2வதுவது தடவை)
பங்குபற்றிய அணிகள் 4
மொத்தப் போட்டிகள் 7
தொடர் நாயகன் இலங்கையின் கொடி அர்ஜுன றணதுங்க
கூடிய ஓட்டங்கள் இலங்கையின் கொடி அர்ஜுன றணதுங்க 272
கூடிய இலக்குகள் இந்தியாவின் கொடி வெங்கடேஷ் பிரசாத் 7

1997 ஆசியக் கிண்ணம்(1997 Asia Cup) ஆறாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் 1997 எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.

ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Cricket Archive: Pepsi Asia Cup 1997 [1]
  • CricInfo: Asia Cup in Sri Lanka, Jul 1997 [2]
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_1997&oldid=1350504" இருந்து மீள்விக்கப்பட்டது