ஆகஸ்டு 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்ட் 8 கிரிகோரியன் ஆண்டின் 220வது நாளாகும். நெட்டாண்டுகளில் 221வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
- 1768 - ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
- 1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
- 1908 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.
- 1942 - இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.
- 1945 - ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
- 1947 - பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
- 1963 - இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.
- 1967 - ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1973 - தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.
- 1974 - வாட்டர்கேட் ஊழல்: ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
- 1988 - மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
- 1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
- 1990 - ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1992 - யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
- 2000 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
- 2006 - திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
பிறப்புக்கள் [தொகு]
- 1924 - அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. 1968)
- 1927 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (இ. 2009)
- 1941 - டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
- 1948 - ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை
- 1981 - ரொஜர் ஃபெடரர், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்
இறப்புகள் [தொகு]
- 1996 - நெவில் மொட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)