ஆகஸ்டு 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXII | ||||||
ஆகஸ்ட் 2 கிரிகோரியன் ஆண்டின் 214வது நாளாகும். நெட்டாண்டுகளில் 215வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
- 1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- 1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
- 1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
- 1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
- 1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.
- 1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
- 1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.
- 1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).
- 1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
- 1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.
- 1968 - பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
- 1973 - மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
- 1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
- 2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1913 - தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர் (இ. 1980)
- 1926 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2008)
[தொகு] இறப்புகள்
- 1860 - சேர் ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர் (பி. 1796)
- 1892 - Dr Bonjean, கொழும்பின் முதலாவது ஆயர்.
- 1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)
- 1923 - வோரன் ஹார்டிங், ஐக்கிய அமெரிக்காவின் 29வது குடியரசுத் தலைவர் (பி. 1865)