அ. சிதம்பரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. சிதம்பரம் (பிறப்பு ஏப்ரல் 14 1934) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். எழுத்துறையில் 'தில்லை' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
பொருளடக்கம் |
எழுத்துத் துறை ஈடுபாடு [தொகு]
இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பத்திரிகையாளராக [தொகு]
1945 முதல் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகின்றார். "தமிழ் நேசன்" நாளிதழிலும், "மலைமகள்" திங்களிதழிலும் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.
பரிசுகளும் விருதுகளும் [தொகு]
- செய்தித் துறைப் பணிக்காக சில விருதுகளும் பெற்றுள்ளார்.