அ.வெங்கடாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அ.வெங்கடாசலம்


பதவியில்
1984 – 1988
பதவியில்
1996 – 2001
பதவியில்
2001 – 2006
தொகுதி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)

பிறப்பு செப்டம்பர் 15, 1955(1955-09-15)
புள்ளாச்சி குடியிருப்பு வடகாடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு அக்டோபர் 7, 2010(2010-10-07)
வாழ்க்கைத்
துணை
லட்சுமி
பிள்ளைகள் ராஜதுரை, ராஜபாண்டி, ராஜராஜன்,பவளக்கொடி, சுமதி
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

அ.வெங்கடாசலம் (A.Venkatachalam) இவரின் சொந்த ஊர் வடகாடு. ஆலங்குடிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாதுறை அமைச்சராகவும்,பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

அக்டோபர் 7 2010 அன்று முகம்தெரியாத கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

வளர்ச்சியும் அரசியல் பின்னணியும்[தொகு]

வெங்கடாசலம் தன்னுடைய கல்வி பயணத்தை இறுதியாக புதுக்கோட்டையில் உள்ள அரசுக்குச்சொந்தமான மன்னர் கல்லூரியில் PUC பயின்றார்.அந்த காலக்கட்டத்திலே அவரின் தகப்பனார் அழகர் சேர்வை வடகாடு பகுதியில் மிகுந்த செல்வாக்குடனும்,மிக நேர்த்தியான தெய்வ நம்பிக்கையுடைவருமாக திகழ்ந்தார்.அந்த வழியில் வெங்கடாசலமும் குறிப்பிட்ட வழிபாட்டு தலங்களை செப்பனிடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.குறிப்பாக ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் செப்பனிடுதல் பணிக்காக இவர் பல வழிகளில் ஈடுபட்டிருந்தார்.1984-ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 வரை தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியாக அவரின் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டவர்.1996ல் கட்சியில் இடம் கொடுக்காத நிலையிலும் சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 30ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒரே தலைவர் இச்சமூகத்தில் இவர் மட்டுமே என்று அப்பகுதி மக்கள் முன்மொழிவதை காண முடியும்.ஆலங்குடி தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக கட்டி கொடுத்துள்ளார். இவரின் சொந்த இடத்தில் வடகாடு கிராமத்திலேயே வற்றாத நீர் ஆதாரம் கொண்ட கொப்பங்குளம் என்ற குளத்தினை அமைத்து அதன் கரையோரத்தில் ஒரு பிள்ளையார் வழிபாட்டுத்தலத்தினை கட்டி வந்தார்.அக்குலத்தின் பரப்பளவு சுமார் 15ஏக்கர் முதல் 25ஏக்கர் கொண்டதாகும்.அக்குலத்தின் ஆழம் சுமார் 15அடி கொண்டதாகும்.மின்சாரம் இல்லாத வேலைகளின் கிராமமே இக்குளத்தையே பயன்படுத்திவருகின்றனர்.

படுகொலையும் அதன் விளைவுகளும்[தொகு]

வெங்கடாசலம் படுகொலையானது அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக வைத்தது.மேலும் உடல்பாகங்கள் துண்டாக வெட்டப்பட்டதின் ரௌத்திரப்பின்விளைவுகளினால் பல வாகனங்களும் அரசு உடைமைகளும் தீக்கிரையாகின.கொலைசெய்யப்பட்ட நாள்முதல் குற்றவாளியாக கருதப்படும் நபர் மதுரை கோர்ட்டில் சரணடையும் வரை வடகாடு பகுதி போர்க்களம் போல காட்சியளித்திருந்தது.சுமார் ஆறுநாட்கள் எவ்வித போக்குவரத்தும் இயங்கவில்லை.மாவட்டத்திலேயே அதிகநாட்கள் வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்த முதல் சம்பவம் இதுவே என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.இப்போராட்டத்தின் ஆழமானது மக்களுக்காக அவரின் அயராத உழைப்பினையே வெளிக்காட்டுவதாக அப்பகுதிமக்கள் எண்ணி இருந்தனர்.நக்கீரன் செய்தி

"http://ta.wikipedia.org/w/index.php?title=அ.வெங்கடாசலம்&oldid=1649406" இருந்து மீள்விக்கப்பட்டது