அஷ்ட லட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அஷ்ட லட்சுமி (சமஸ்கிருதம்:अष्टलक्ष्मी, ஆங்கிலம்:Ashta Lakshmi) என்பது திருமாலின் மனைவியான இலக்குமி தேவி எடுக்கும் எட்டு வடிவங்களை குறிக்கிறது. மகா லட்சுமி ஒவ்வொரு யுகத்திலும் அஷ்ட(எட்டு) வடிவங்கள் எடுப்பதாக வைணவர்கள் நம்புகிறார்கள். செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.

அஷ்ட லட்சுமி

ஆதிலட்சுமி[தொகு]

ஆதிலட்சுமி (சமஸ்கிருதம்: आदि लक्ष्मी) திருமாலுடன் வைகுண்டத்தில் இருக்கும் லட்சுமி வடிவம் ஆதிலட்சுமியாகும். ஆதிக்கும் ஆதியானவள் என்பதால் ஆதிலட்சுமி என்று வழங்கப்படுகிறார். நான்கு கரங்களுடையவள். கரங்களில் தாமரையை கொண்டிருப்பவள். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்று அழைக்கின்றார்கள். திருமாலுக்கு பணிவிடை செய்பவளாக இந்த ஆதிலட்சுமி இருக்கிறாள்.

தானியலட்சுமி[தொகு]

தானியலட்சுமி (சமஸ்கிருதம்:धान्य लक्ष्मी) தானியங்கள், கூலங்கள், காய்கனிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் அதிபதி தானியலட்சுமியாவார். தானியமும் செல்வமாக கருதப்படுகிறது. தானியலட்சுமி எட்டு கரங்களை கொண்டவளாகவும், அபய முத்திரையுடன், தாமரைகளை கொண்டும் காணப்படுகிறாள்.

தைரியலட்சுமி[தொகு]

துணிவும் நேர்மையும் தருபவள்.

கஜலட்சுமி[தொகு]

பாற்கடல் கடைந்தபோது, இவ்வடிவத்தில் லட்சுமி எழுந்தருளியதாக வேதவியாசர் குறிப்பிடுகிறார். முழுதும் மலர்ந்த தாமரைமீது அவள் அமர்ந்திருக்க, யானைகள் பால் கலசங்களிலிருந்து அவள்மீது பாலைப் பொழிந்து அபிஷேகிக்க, கரங்களில் தாமரை ஏந்தி, எல்லையற்ற கருணையோடு காட்சி தருகிறாள்.

சந்தானலட்சுமி[தொகு]

குழந்தைச் செல்வமும், நிரந்தரச் செழுமையும் தருகின்ற லட்சுமி வடிவம் சந்தான லட்சுமியாகும். இந்த வடிவத்தில் லட்சுமி சிறுகுழந்தையை மடியில் அமர்த்தி கைகளால் அனைத்தபடி இருக்கிறாள். மேலும் கத்தி, கேடயம், கும்பம் ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறாள்.

விஜயலட்சுமி[தொகு]

விஜய என்றால் வெற்றி. சிறந்த வெற்றி தேவதையாக விஜயலட்சுமி வடிவம் வணங்கப்படுகிறது.

தனலட்சுமி[தொகு]

சிறந்த பொருட்செல்வம் அருள்பவளாக தனலட்சுமி விளங்குகிறாள்.

வித்யாலட்சுமி[தொகு]

அறிவும் கல்வியும் ஞானமும் வழங்குபவள். எட்டு வகையாகப் பார்க்கப்பட்டாலும், அவளே ஆதிசக்தி.

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்ட_லட்சுமி&oldid=1405312" இருந்து மீள்விக்கப்பட்டது