அஷ்டலட்சுமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 12°59′33″N 80°16′14″E / 12.9925, 80.2706 அஷ்டலட்சுமி கோயில் (Ashtalakshmi Kovil) சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. இங்கு இலட்சுமியின் எட்டு வடிவங்கள் வழிபடப்படுகின்றன.

அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கசலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம்.

அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு.


"http://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டலட்சுமி_கோயில்&oldid=1465256" இருந்து மீள்விக்கப்பட்டது