அவோகாடரோ எண்
அவோகாடரோ எண் (Avogadro constant) என்பது வேதியியல் கணக்கீடுகளில் பயன் படுத்தப்படும் ஒரு மாறிலி ஆகும். இது ஒரு மிகப்பெரிய எண். ஒரு மோல் அளவு அல்லது ஒரு கிராம் அளவு அல்லது ஒரு கிராம் அயனி அளவு உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அல்லது அயனிகள் இவைகளின் எண்ணிக்கையே அவோகாடரோ எண் என்பதாகும். இதனைக் கண்டறிந்தவர் அமேடியோ அவகாதரோ.
ஒரு மோல் அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே 6.023 x 10 23 ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக 18 கிராம் நீர், 180 கிராம் குளுக்கோஸ், 44 கிராம் கார்பன் ஈராக்சைடு, 32 கிராம் ஆக்ஸிஜன், இரண்டே இரண்டு கிராம் ஹைட்ரஜன்... இப்படி இந்த அத்தனைப் பொருள்களிலும் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் 6.023 x 10 23 என்ற அவோகாடரோ எண் ஆகும்.
[தொகு] உசாத்துணை
சி. சண்முகம், அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2010 இதழ்