அவளுக்கு முன் ஒரு உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவளுக்கு முன் ஒரு உலகம் (The World Before Her) என்பது 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடிய ஆவணத்திரைப்படம் ஆகும் இதை நிஷா பகுஜா இயக்கினார்.[1]

அவளுக்கு முன் ஒரு உலகம்

கதைச் சுருக்கம்[தொகு]

விஸ்வ இந்து பரிசத்தின் பெண்களுக்கான அமைப்பான துர்க்கா வாகிணி வளாகத்தில் பிராச்சி என்ற பெண்ணுடன் அறிமுகக்களம் காணும் இப்படம், இந்திய அழகி போட்டிக்காகத் தயாராகும் பயிற்சி முகாமுடன் துவங்குகிறது. இந்து ராச்சியத்தைக் காப்பாற்ற போராடும் பெண்கள் ஒருபுறம், இந்திய அழகிப்போட்டியை வெல்ல துடிக்கும் பெண்கள் ஒருபுறம் என இருவேறு உலகத்திற்குள் நகருகின்றது.

இந்துத்துவாவிற்காகக் கல்யாணமே செய்யாமல் இருக்கும் பெண் பிராச்சி, தனக்கு முஸ்லீம் நண்பர்களே கிடையாது என்று பெருமைப்படும் பெண் சின்மயி. பூஜா சோப்ரா இரண்டாவது பெண்குழந்தையாகப் பிறந்ததால் அவளின் அப்பா அவளைக் கொன்றுவிட வற்புறுத்துகிறார், ஆனால் அவளின் அம்மா அவளைத் தனியாக வளர்த்து 2009ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாக மாற்றுகிறார்.

பெண் சக்தி, பெண் முன்னேற்றம் என்று போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் பேசினாலும் அவர்களைப் ஒரு பொருளாகவே கருதுகிறார்கள் என்று அந்த பயிற்சி முகாம் அம்பலப்படுத்துகிறது.

விருதுகள்[தொகு]

2012ஆம் ஆண்டுக்கான ஹாட் டாக்ஸ் கனடிய ஆவணப்பட விழாவில் (Hot Docs Canadian International Documentary Festival) சிறந்த கனடியப் படத்திற்கான விருதை பெற்றுள்ளது. ட்ரைபெகா திரைப்பட விழாவில் (Tribeca Film Festival) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதும், முதலாவது கனடிய திரை விருதுகள் வழங்கும் விழாவில் (1st Canadian Screen Awards) சிறந்த நீள ஆவணப்படம் என்ற விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியீடு[தொகு]

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம், 6ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உதவியுடன் திரையிடப்பட்டுள்ளது. அப்போது அவர் இப்படம் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.[2][3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவளுக்கு_முன்_ஒரு_உலகம்&oldid=3899191" இலிருந்து மீள்விக்கப்பட்டது