பெண்குறி
| மனித பெண்குறி | |
|---|---|
| மயிர் நீக்கப்பட்ட பெண்குறி | |
| இலத்தீன் | pudendum femininum |
| கிரேயின் | |
| தமனி | Internal pudendal artery |
| சிரை | Internal pudendal veins |
| நரம்பு | Pudendal nerve |
| நிணநீர் | Superficial inguinal lymph nodes |
| முன்னோடி | Genital tubercle, urogenital folds |
| ம.பா.தலைப்பு | Vulva |
பெண்குறி (vulva) பெண் பாலூட்டியின் வெளிப்புறமுள்ள இனப் பெருக்க உறுப்புகளில் ஒன்றாகும்.[1] பிற பாலூட்டிகளுக்கும் இதே போன்ற வடிவமைப்பு இருப்பினும் இங்கு குறிப்பாக மனித இன பெண்குறி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
பெண்குறியில் பல பெரிய மற்றும் சிறிய உடற்கூற்று அமைப்புகள் அடங்கி உள்ளன; மேல்/கீழ் இதழ்கள், பூப்பு வெளி, பெண்குறிக் காம்பு, இடைகழிகள், இடைகழி நாளங்கள் மற்றும் புணர்புழையின் துளை ஆகியன சிலவாகும். இதன் வளர்ச்சி பல நிலைகளாக நிகழ்கிறது; முதன்மையாக முதிர்கரு காலத்திலும் பூப்படையும் பருவத்திலும் நிகழ்கின்றன. கருப்பையின் வெளிவாசலாக இருப்பதால் இதனை இரட்டைக் கதவுகளால் காக்கிறது: பெரிய மேல் இதழ் மற்றும் சிறிய உள் இதழ். தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் புணர்புழை உடல்நலத்திற்கு உதவ நுண்ணுயிர்களை உள்ளிருந்து வெளியேற்றுகிறது. எனவே பெண்குறியை வெளிப்புறமாக சுத்தம் செய்தாலே பிறப்புறுப்புப் பகுதி சுகாதாரம் பேணப்படும்.
பெண்குறி பாலுறவின்போது பங்காற்றுகிறது; இப்பகுதி உறுப்புகள் அனைத்துமே நெருக்கமான நரம்புப் பிணைப்புக்களைக் கொண்டு சரியான முறையில் தூண்டப்பட்டால் சிற்றின்ப சுகம் தருகின்றன. கலையின் பல வடிவங்களிலும் பெண்குறி உயிர் தரும் சக்தியாகவும் பாலின்பம் வழங்கும் சக்தியாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.[2]
பெண்குறி பெண்ணின் சிறுநீர்க்குழாயின் துளையையும் கொண்டிருப்பதால் சிறுநீர் கழிக்கும் உயிர்வாழ் செயல்பாட்டையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ vulva at Dorland's Medical Dictionary
- ↑ Lerner, Harriet (2003). "‘V’ is for vulva, not just vagina". The Lawrence Journal-World. பார்த்த நாள் 1 August 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்சனரியில் vulva என்னும் சொல்லைப் பார்க்கவும். |
பொதுக்கோப்பகத்தில் Vulva தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.
பொதுக்கோப்பகத்தில் Vulva symbols தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.- 'V' is for vulva, not just vagina by Harriet Lerner discussing common misuse of the word "vagina"
- Pink Parts – "Walk through" of female sexual anatomy by sex activist and educator Heather Corinna (illustrations; no explicit photos)
|
||||||||||||||||||||