அட்டிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அற்றிலா த ஹன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்டிலா
ஹண் பேரரசின் ஆட்சியாளன்
Atilla fléau de dieu.jpg
ஆட்சிக்காலம் 434–453
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கிபி 453
முன்னிருந்தவர் பிளெடா, ருகிலா
பின்வந்தவர் எல்லாக்
துணைவர் கிரெக்கா
தந்தை முந்த்சுக்

அட்டிலா என அழைக்கப்படும் அற்றிலா த ஹன் (Attila the Hun, 406-453) எனப்படும் அற்றிலா ஹண் பேரரசர்களுள் கடைசியானவனும் மிகவும் பலம் வாய்ந்தவனும் ஆவான். 434 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அக்காலத்து ஐரோப்பாவின் மிகப் பெரிய பேரரசை ஆண்டவன் இவனாவான். அவனது பேரரசு மத்திய ஐரோப்பாவிலிருந்து கருங்கடல் வரையிலும் டன்யூப் நதியிலிருந்து பால்டிக் வரையிலும் பரந்திருந்தது. இவனது போர்த்தந்திரங்கள் மிகவும் விசித்திரமானவை.எதிரிகளை பல திசைகளில் இருந்து தாக்கும் இவனது சூழ்ச்சி கிழக்கு மற்றும் மேற்கு ரோமபெரரசுகளை கதிகலங்க வைத்துள்ளதாக சான்றுகள் குறிப்பிடுகின்றன.இவன் danube நதியை இரு தடவை கடந்து பால்கன் தேசங்களை சூறையாடினான். ஆனாலும் இவனால் கான்ஸ்டாண்டிநோபெல் நகரை கைப்பற்ற முடியவில்லை.இவன் ரோமதேசத்தின் பிடியில் இருந்த பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்ற முனைந்தான்,அனால் எனும் போரில் அவன் தோல்வியுற்றான்.இதன்பிறகும், அட்டிலா இத்தாலி மீது போர் தொடுத்தான்.அவனால் இத்தாலியின் வடக்கை கைப்பற்ற முடிந்தது, அனால் ரோம் நகரை கைப்பற்ற முடியாமல் போனது.இவன் 453 ம் ஆண்டு இறந்தான்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அட்டிலா&oldid=1344862" இருந்து மீள்விக்கப்பட்டது