அர்ஜுன றணதுங்க
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
| அர்ஜுன றணதுங்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| உயரம் | 5 ft 8 in (1.73 m) | |||
| உயரம் | 1.85 m (6) | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1982–2001 | Sinhalese Sports Club | |||
| தரவுகள் | ||||
| தே | ஒ.ப | |||
| ஆட்டங்கள் | 93 | 269 | ||
| ஓட்டங்கள் | 5,103 | 7,456 | ||
| ஓட்ட சராசரி | 35.69 | 35.84 | ||
| 100கள்/50கள் | 4/38 | 4/49 | ||
| அதியுயர் புள்ளி | 135* | 131* | ||
| பந்துவீச்சுகள் | 2373 | 4710 | ||
| விக்கெட்டுகள் | 16 | 79 | ||
| பந்துவீச்சு சராசரி | 65.00 | 47.55 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/17 | 4/14 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 47/– | 63/– | ||
|
11 பெப்ரவரி, 2013 தரவுப்படி மூலம்: [1] |
||||
அர்ஜூன றணதுங்க (பிறப்பு - டிசம்பர் 1, 1963) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் இப்பொழுது இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
50/4,C பெலவத்தை ரோட், நுகேகொடயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
வெளி இணைப்புகள் [தொகு]
| முன்னர் ரஞன் மடுகல்லே |
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் 1988/89-1999 |
பின்னர் சனத் ஜெயசூரிய |