அர்ஜுன் கவச வாகனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அர்ஜூன் | |
|---|---|
மணல் மேடுகளில் அர்ஜூன் பரிசோதிக்கப்படுகிறது |
|
| வகை | முக்கிய சண்டை டாங்கு |
| அமைக்கப்பட்ட நாடு | |
| உற்பத்தி வரலாறு | |
| அமைத்தவர் | சி. வி. ஆர். டி. ஈ, டி. ஆர். டி. ஓ |
| அமைத்த நாள் | மார்ச் 1974–தற்போது வரை |
| தயாரிப்பாளர் | கனரக வண்டிகள் தொழிற்சாலை, ஆவடி |
| ஓரலகுக்கான செலவு | ரூ. 17.2 கோடி[2] |
| உருவாக்கியது | 2004–தற்போது வரை |
| எண்ணிக்கை அடித்தளம் | 124[1] |
| மாற்று வடிவம் | Tank EX |
| அளவீடுகள் | |
| எடை | 58. 5 டன்கள் |
| நீளம் | 10.638 மீ |
| அகலம் | 3.864 மீ |
| உயரம் | 2.32 மீ |
| பணிக் குழு | 4 (தலைவர், சுடுனர், ஏற்றுபவர் மற்றும் ஓட்டுனர்) |
|
|
|
| கவசம் | எஃகு/கூட்டுக் கவசம் காஞ்சன் கவசம். |
| முதல் நிலை ஆயுதங்கள் |
120 மி. மீ சுருள் துளையிடப்பட்ட டாங்கு பீரங்கி லஹாட் எதிர்-டாங்கு ஏவுகணை ஹீட், ஏபிஎஸ்டிஎஸ், ஹேஷ் டாங்கு குண்டுகள்[3] |
| இரண்டாம் நிலை ஆயுதங்கள் |
ஹெச்.சி.பி 12.7 மி. மீ விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கி மாக் 7.62 மி. மீ டி. கே 715 அச்சொன்றிய எந்திரத் துப்பாக்கி[3] |
| இயந்திரம் | எம். டி. யூ 838 கே ஏ. 501 டீசல் எஞ்சின் 1,400 குதிரை சக்தி (1,040 கிலோவாட்) |
| ஆற்றால்/எடை | 26 குதிரை சக்தி/டன் |
| பரவுமுறை | Renk epicyclic train gearbox, 4 முன்னோக்கும் மற்றும் 2 பின்னோக்கும் பல் சக்கரங்கள் |
| Suspension | நீர்-காற்றியக்கம் |
| எரிபொருள் கொள்ளளவு | 1,610 லிட்டர் |
| இயங்கு தூரம் | 450 கி. மீ[3] |
| வேகம் | மணிக்கு 72 கி. மீ (சாலைகளில்)[3]
மணிக்கு 40 கி. மீ (சீரற்ற நிலப்பரப்பில்)[3] |
அர்ஜுன் (Arjun MBT)) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும் (டாங்கு). இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் 124 அர்ஜுன்களை டி. ஆர் டி ஒ விடம் கோரியது. இது சென்னையில் உள்ள ஆவடி கவச வண்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதன் உருவாக்கம் பல்வேறு தாமதங்களையும் பல தோல்விகளையும் தாண்டி வந்தது ஆகும். இது இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள டி-90 என்னும் கவச வாகனத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ DRDO working on more advanced version of Arjun MBT: Saraswat
- ↑ India, Frontier. "Indian MoD outlines roadmap for MBT Arjun, Mark II in pipeline | Frontier India Strategic and Defence - News, Analysis, Opinion". Frontierindia.net. பார்த்த நாள் 2010-02-07.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Arjun specifications india-defence.com
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: அர்ஜூன் |