அரேபியா விமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏர் அரேபியா
ஐஏடிஏ
G9
ஐசிஏஓ
ABY
கால்சைன்
அரேபியா
நிறுவல் பெப்ரவரி 3, 2003
செயற்பாடு துவக்கம் அக்டோபர் 28, 2003
செயற்படு தளங்கள் சார்ஜா பன்னாட்டு விமானநிலையம்
வான்சேவைக் கூட்டமைப்பு Arab Air Carriers Organization
துணை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை 22
சேரிடங்கள் 57
தலைமையிடம் சார்ஜா பன்னாட்டு விமானநிலையம்
சார்ஜா, அமீரகம்
முக்கிய நபர்கள் ஆதில் அலி (CEO)
இணையத்தளம் airarabia.com
SU-AAB Air Arabia A320.JPG

அரேபியா விமான‌ம் (ஆங்கில‌ம் :ஏர் அரேபியா) (அர‌பி: அல் அரேபியா லில் த‌ய‌ரான்) என்ப‌து ஷார்ஜா ந‌க‌ர‌த்தை த‌லைமைய‌க‌மாக‌க் கொண்டுள்ள‌ ம‌த்திய‌க் கிழ‌க்கைச் சேர்ந்த‌ ஒரு தாழ்விலை விமான‌ சேவை நிறுவ‌ன‌மாகும். அத‌ன் முத‌ன்மை த‌ள‌ம் ஷார்ஜா ப‌ன்னாட்டு விமான‌நிலைய‌ம் ஆகும். இந்நிறுவ‌ன‌ம் ம‌த்திய‌க்கிழ‌க்கு, ம‌த்திய‌ ஆசியா, இந்திய‌த் துணைக்க‌ண்ட‌ம், ஐரோப்பா ஆகிய‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளில் 46 இட‌ங்க‌ளுக்கு முறைப்ப‌டி வான்சேவைக‌ளைக் கொண்டுள்ள‌து.

வ‌ர‌லாறு[தொகு]

இந்நிறுவ‌ன‌ம் ஃபிப்ர‌வ‌ரி 2003இல் நிறுவ‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் முத‌ல் ப‌ற‌ப்பு ஷார்ஜாவிலிருந்து ப‌ஹ்ரெயின் இடையில் தொட‌க்க‌ப்ப‌ட்ட‌து. முத‌ல் ஆண்டிலிருந்தே இது இலாப‌த்தை திர‌ட்டிய‌து.

விப‌த்துக‌ள் ம‌ற்றும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள்[தொகு]

  • மே 2006 அரேபியா விமான‌த்திற்கு குத்தகையிட‌ப்ப‌ட்ட‌ விமான‌ம் பிர‌ஸ்ஸ‌ல்ஸ் விமான‌நிலைய‌த்திலுள்ள‌ விமான‌க்கூடார‌த்தில் தீப்ப‌ற்றிய‌து.
  • ஏப்ர‌ல் 2010இல் ச‌ர‌க்க‌றையில் தீ ஏற்ப‌ட்ட‌க் கார‌ண‌த்தால் இத‌ன் விமான‌ம் ஒன்று க‌ராச்சி விமான‌நிலைய‌த்தில் அவ‌ச‌ர‌ தரையிற‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரேபியா_விமானம்&oldid=1360850" இருந்து மீள்விக்கப்பட்டது