அருவி மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருவி மாதிரி

அருவி மாதிரி அல்லது அருவி முறையியல் என்பது ஒரு 'மென்பொருள் மேம்பாட்டு முறையியல்' அல்லது 'மென்பொருள் உருவாக்க முறையியல்' ஆகும். இது வரிசையாக, திட்டமிட்டு, வடிவமைப்புக்கு கவனம் தந்து மேற்கொள்ளப்படும் முறையாகும். மென்பொருள் கட்டமைப்பு பணிகள் சீராக, தொடர்ச்சியாக ஒன்றில் இருந்து ஒன்றுக்கு போவதால் அருவி மாதிரி என்று பெயர் வந்தது.

மாதிரி[தொகு]

வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் அவர்கள் அறிமுகப்படுத்திய மூல அருவி மாதிரியில், ஒரு மென்பொருளானது பின்வரும் கட்டங்களில், வரிசையாக, சீராக உருவாக்கப்பட்டது.

  1. மென்பொருள் தேவைக்குறிப்புகள்
  2. மென்பொருள் வடிவமைப்பு
  3. மென்பொருள் கட்டமைப்பு
  4. மென்பொருள் ஒருங்கிணைப்பு
  5. மென்பொருள் சோதித்தல்
  6. மென்பொருள் நிறுவல் அல்லது செயற்படுத்தல்
  7. மென்பொருள் பராமரித்தல்

இந்த மாதிரியின் படி, 'ஒரு கட்டத்தின் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்' என்கிற நிபந்தனை உள்ளது. எனினும், பல்வேறு மாற்றப்பட்ட அல்லது திருத்தப்பட்ட அருவி மாதிரிகள் (ராய்ஸ் மாதிரியின் இறுதி வடிவம் உட்பட) உள்ளன. அவற்றின் நிகழ்முறைகளில் சிறிய அல்லது பெரிய வேறுபாடுகள் சேர்க்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_மாதிரி&oldid=1703223" இருந்து மீள்விக்கப்பட்டது